பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 81

மாறும் என்பதை மறந்த அவன் மலைநாட்டு மக்களின் செயலே போல் அறியாமை உடைத்து!" எனக் கூறுவாள் போல், அவனையும், அவன் மலையையும் பாராட்டிப் பாடி முடித்தாள்.

இவ்வாறு பாடிய பாட்டின் பயனாய், அவ்விளை ஞன் வாராமையால் வாடிய அப்பெண்ணின் உடல், அவ் வாட்டம் ஒழிந்து வனப்புற்றது. அவனை நேரிற் கண்டதைப் போல, அவளும் அக மகிழ்ந்தாள். அவள் மகிழ்ச்சி கண்டு மகிழ்ந்த தோழி, அவன் வாராமையால், அவள் வருந்தும் வருத்தத்தை இவ்வாறு பல வழிகளை மேற்கொண்டு போக்க வேண்டிய் தன் கடமையினை எண்ணிக் கொண்டிருந்தாள் ஒரு நாள். அப்போது, அவ்விளைஞன் அவளை நோக்கி வந்தான்். அதைக் கண்டு கொண்ட அவள், உடனே அவனைக் காணாதாள் போல் இருந்து, அப்பெண்ணின் வருத்தத்தையும், அவள் அவ் வருத்தத்தை மறந்திருக்கத் தான்் மேற்கொள்ளும் ஆடல் பாடல்கள் போலும் பல்வேறு வழிகளையும், பொருளாகக் கொண்ட ஒரு பாட்டை அவன் கேட்கப் பாடத் தொடங்கினாள். ஆங்கு வந்த அவன், அவள் அறியாவாறு, ஒருபால் இருந்து, அவள் பாடிய பாட்டைக் கேட்டுத் தன் காதலியின் துயர் நிலை அறிந்து, அவளை விரைவில் வரைந்து கொள்ள வேண்டிய தன் கடமையில் கருத்துடை யானாகிச் சென்றான். தான்் தொடங்கிய வள்ளைப் பாட்டு, தன் தோழியின் துயரத்தை ஒழித்ததோடு, வரை விற்கும் வழி செய்தது கண்டு அகமகிழ்ந்தாள் தோழி.

தோழியும், அவள் துணைவியும் பாடிய வள்ளைப் பாட்டைக் கூறுவது இச்செய்யுள்: -

குறிஞ்சி-6