பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 83

கொடுங்காய் குலைதொறுஉம் தூங்கும், இடும்பையால் 25 இன்மை உரைத்தார்க்கு, அது நிறைக்கல் ஆற்றாக்கால் தன்மெய் துறப்பான் மலை;

எனவாங்கு கூடி அவர் திறம்பாட, என் தோழிக்கு

வாடிய மென்தோளும் வீங்கின, - 30 ஆடமை வெற்பன் அளித்தக்கால் போன்றே.”

தலைவன் - விரைந்து வந்து வரைந்து கொள்ளானாகத் தலைவி வருந்திய விடத்துத் தோழி தான்ும் தலைவியும் பாடிய வள்ளைப் பாட்டில் முருகன் புகழ் பாடுவார் போல், தலைவன் புகழ் பாட, அதனால் தலைவி தன் வருத்தம் நீங்கி வனப்புற்றதைப் பின்னொரு கால் தலைவன் சிறைப்புறத்தான்ாகத் தோழி, தனக் குள்ளே சொல்லியது எனும் துறை அமைய வந்துளது இது.

உள்ளுறை: காந்தள் மலரும் பருவம் நோக்கி வண்டு இருத்தல், மணத்திற்குச் சுற்றத்தார் மனம் நெகிழும் காலத்தை எதிர்நோக்கித் தலைவன் இருத்தலாம். வருடை மான் கன்று, தன் இளமையால், மருளத் தகாத கருங் குரங்கைக் கண்டு மருளல், தலைவி, தன் வருத்த மிகுதி யால் மயங்கிச் சுற்றத்தார் வரைவிற்கு உடம்படாரோ என அச்சுற்றத்தாரை மருளலாம். பாளை உதிர்ந்து விடவே, மூங்கில் விளங்கித் தோன்றல், தலைவன் வரைந்து கொள்ளவே, பசலை அகலத் தலைவியின் உடல் வனப் புற்றுத் தோன்றலாம். யானை பிடியோடு தழை உண்டு இனிது வாழ்தல், தலைவன், தலைவியை மணந்து இன்பம் நுகர்ந்து, இல்லறம் ஆற்றுவன் என்பதாம். வாழைக்குலை