பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ல் புலவர் கா. கோவிந்தன்

புலியடிபோல் தோன்றல், வரைந்து கொண்டு பேரின்பம் தரவல்ல தலைவன், வரைந்து கொள்ளாமையால் கொடியவன் போல் தோன்றுதலாம்.

முருகனுக்குக் கூறுங்கால், சூரனை வென்றதும், வள்ளியைப் பணிந்து பின் நிற்றலும், தொலையாமையும் தோற்றலுமாம். அவனும் திருமேனி கொண்டு திகழ்தலின், குற்றம் கூறாமை உண்டு, மக்கள் மாறி மாறிப் பல பிறவி எடுத்துத் துன்புற்று, வீடுபெற மாட்டாது வருந்தி வந்து தம் குறை உரைப்பின், அவர்களை வீட்டுலக இன்பத்தை அடைவித்தற் பொருட்டு, அவர்கள் உள்ளத்தே சென்று தான்் தங்குதலாம்.

1. வெறி-மதம், பொறி-புள்ளி, வாரணம்-யானை;2. இமிர்புஒலித்து, 4. இருவாம்-குற்றி, 5. ஐயன்-முருகன் 6. மை-மேகம், படு-உண்டாகிறநின்ற; பயமலை-பயன் தரும் மலை; 8. தகையவர்-மகளிர்; செறித்த-அணிந்த, தாள்-விரல்அணி, 9. முகை-அரும்பு; 12. வெருள்பு-மருண்டு யூகம்-கருங்குரங்கு; 13. இருள்துங்கு-இருள்நிறைந்த ஊர்பு இழிபு-ஏறி இறங்கி; 15. தெருள-விளங்க; பாடித்தை-பாடு, 16. நுண்பொறி-மெல்லிய ஒலி களையும் கேட்கவல்ல உறுப்பு: வெதிர்-மூங்கில்; 18. மாறு கொண்டுமாறுபட்டு 19. தேற்றாதோன்-தெரியாதவன்; 20. வளகுஒருவகைத் தழை, 21 வரைபுரை-மலையை ஒத்த; 22 வயங்கு எழில்-விளங்குகின்ற அழகு 24. உழுவை-புலி, 25. கொடுங்காய்வளைந்தகாய், தூங்கும்-தொங்கும்; 31. ஆடுஅமை-அசைகின்ற மூங்கில்.