பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

என்னையும் மறைத்தாள்!

இளைஞன் ஒருவன், அழகும் அறிவும் ஒருங்கே வாய்ந்த பெண் ஒருத்தியைக் கண்டு காதல் கொண்டான். அவர்கள் காதல் நாடகத்திற்குத் துணை செய்தாள் அப் பெண்ணின் தோழி. தம் மகள் இவ்வாறு காதல் உறவு கொண்டு ஒழுகுவதை அப் பெண்ணின் பெற்றோர் அறியார். தம் மகளின் நல்வாழ்வில் கருத்துடையராய்க் கவலையோடு காத்து வரும் அவர்கள் அறியாவாறு சென்று, அவனைக் கண்டு மகிழ்தல் அவளுக்கும் அரிதா யிற்று. பலமுறை ஆங்கு வந்தும், அவளைக் காணமாட் டாது வறிதே திரும்பினான் அவனும். அதனால் அவனைக் காணாது, அவள் துயர் உற்றாள். இந்நிலையை மாற்றி, எப்போதும் இடையறாது உடனிருந்து மகிழும் வகையில் மணஞ்செய்து கொள்ள மாட்டானா, என ஆவலோடு எதிர் நோக்கியிருந்தாள் அப் பெண். ஆனால், கள்வனைப் போல் கரந்து வந்து மகிழ்ந்து செல்வதிலேயே பேரின்பம் உளது எனக் கருதிய அவ்விளைஞ்ன், Logor