பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. இ. புலவர் கா. கோவிந்தன்

முயற்சியை விரைவில் மேற்கொண்டிலன். அதனால், அவள் உள்ளத் துயரும், உடல் தளர்ச்சியும் முன்னினும் அதிகமாயின.

அவன் வாராமையால் வந்துற்ற வருத்தம் ஒருபால் வருத்த, மற்றொரு பெருங்கவலை அவளைப் பிறிதொரு பால் பற்றி வருத்தத் தொடங்கிற்று. தான்் படும் துயரைத் தன் தோழியோ, தன்னோடு ஆடி மகிழும் தன் தோழியர் கூட்டமோ, தன் சிற்றுாரில் வாழும் தன் சுற்றத்தினரோ அறிந்துவிடின், தன் வருத்தத்திற்குக் காரணமாய தன் காதலனைப் 'பிரியேன் என அன்று கூறிய தன் ஆணையைக் காக்க மாட்டா அறனிலி!” என்றும், பெண் னின் பெருந்துயர் கண்டும் அதைப் போக்க எண்ணாப் பண்பாடற்றவன்! என்றும் பலப்பல கூறிப் பழிப்பரே என அஞ்கினாள். தன் காதலனைத் தன் முன்னரே பிறர் பழிப்பதையோ, அதற்குத் தான்ே காரணமாவதையோ அவள் உள்ளம் பொறுக்காது. அவர் கூறும் பழியுரை களைக் கேட்பதால் உண்டாம் துயரினும், அவன் வாராமையால் உண்டாம் துயர் பெரிது அல்ல என எண்ணினாள். அதனால், பிரிவுத் துயர் அளவிறந்து பெருகித் தன்னை வாட்டி வதைக்கவும், அதைத் தன் உயிர்த் தோழியோ, உடன் ஆடும் ஆயத்தாரோ, ஊராரோ உணராவாறு உள்ளடக்கிக் காத்துக் கொண்டாள்.

அப் பெண்ணின் இப் பெருநிலை கண்டு, தன்னுள்ளே வியந்து பாராட்டிய தோழி, இவள் வருத்தம் நீங்கி வாழ்வு பெற அவ்விளைஞன் விரைந்து வந்து வரைந்துகொள்ளானோ எனும் விருப்பம் உந்த, ஒரு நாள், அவன் வருகையை எதிர்நோக்கி இருந்தாள்.