பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ 87

அப்போது, ஆங்கு அவள் கண்ட அவன் நாட்டு மலைக் காட்சி அவள் உள்ளத்தை ஈர்த்தது. எதிர் எதிராக நிற்கும் இரண்டு பெரிய மலைகளையும், அவற்றின் இடைப்பட்ட பள்ளத்தாக்கில், அடிமரம் பருத்து, ஓங்கி வளர்ந்து, கிளையோ, இலையோ தெரியாவாறு, மலர் களால் நிறைந்து நிற்கும் ஒரு வேங்கை மரத்தையும், அவ் விரு மலைகளினின்றும் பேரொலியோடு பாய்ந்து வரும் அருவிகளின் நீர், அம்மரத்துக் கிளைகளில் வீழ்வதையும் கண்டு கருத்திழந்திருந்தாள். அக் காட்சி, அன்றலர்ந்த தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருமகள் மீது, இரு யானைகள் அவள் இருமருங்கும் இருந்து, பூவையும், நீரையும் சொரியும் காட்சியை நினைப்பூட்ட, அவ்வழகில் தன் நினைப்பிழந்து நின்றவள், தன் தோழியின் நிலையை நினைத்துக் கொள்ளவே, "என் ஆருயிர் அனைய இவள், அவள் விரும்பும் அவ்விளைஞனை மணந்து, அவன் மனை புகுந்து, இவள் சுற்றத்தினரும், அவன் சுற்றத்தினரும் ஒருங்கே பாராட்டிப் பெருஞ் சிறப்புச் செய்ய, மக்களைப் பெற்று மனையறம் காத்து மகிழ்ந்து வாழுமாறு, அவன் விரைவில் வரைந்து கொண்டிலனே!” என எண்ணிக்

கவலையுற்றாள். - .

அந்நிலையில், அவ்விளைஞனும் ஆங்கு வந்தான்். வந்தான்்பால், அவன் காதலியின் துயர்க் கொடுமையை யும், அதைப் பிறர் அறியாவாறு மறைத்து, அவன் பெருமையைப் பேணிக் காத்து, அவனுக்குப் புகழ் தேடித் தரும் அவள் கற்பின் மாண்பையும் எடுத்துக் கூறி, "அத்தகையாளை இனியும் வருந்தவிடல் அறமாகாது. ஆகவே, அன்ப! அவள் துயர் தீர்க்கும் அருமருந்தாய