பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ↔ புலவர் கா. கோவிந்தன்

திருமணத்தை விரைவில் மேற்கொள்ள ஆவன புரிவாயாக!” என வேண்டிக் கொண்டாள்.

தோழி கண்ட அவன் நாட்டு மலைக் காட்சி, அப் பெண்ணின் பெருமை, அவ்விளைஞனுக்கு அவள் உரைத்த அறிவுரை ஆகிய இவற்றைக் கூறுகிறது இச் செய்யுள்;

கதிர்விரி கனைசுடர்க் கவின்கொண்ட நனஞ்சாரல் எதிர் எதிர் ஒங்கிய மால்வரை அடுக்கத்து அதிர்இசை அருவிதன் அஞ்சினை மிசைவீழ முதிர்இணர் ஊழ்கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை, வரிநுதல் எழில் வேழம், பூ, நீர் மேல் சொரிதரப் 5

புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறுஎய்தித் திருநயந்து இருந்தன்ன தேங்கமழ் விறல் வெற்ப; தன்எவ்வம் கூரினும், நீ செய்த அருளின்மை என்னையும் மறைத்தாள் என்தோழி, அதுகேட்டு நின்னையான் பிறர் முன்னர்ப் பழிகூறல் தான்்நாணி, 10

கூறுநோய் சிறப்பவும், நீ செய்த அருளின்மை சேரியும் மறைத்தாள் என்தோழி, அதுகேட்டு ஒரும் நீ நிலையலை எனக்கூறல் தான்்நாணி;

நோய்அட வருந்தியும் நீசெய்த அருளின்மை - ஆயமும் மறைத்தாள்என் தோழி அதுகேட்டு 15 மாயநின் பண்பின்மை பிறர்கூறல் தான்்நாணி,

எனவாங்கு, இனையனதீமை நினைவனள் காத்து ஆங்கு அணையரும் பண்பினால் நின் தீமை காத்தவள்,