பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 89

அருந்துயர் ஆரஞர் தீர்க்கும் - 20 மருந்தாகிச் செல்கம் பெரும! நாம் விரைந்தே"

வரைந்து கொள்ளாது வந்து செல்லும் தலைவனைத் தோழி, தலைவியின் கற்புச் சிறப்பும், ஊரில் எழும் அலரும், அதனால் அவள் பெறும் துயரும் கூறி வரைவு கடாயது எனும் துறையமைய வந்துளது இச்செய்யுள்.

உள்ளுரை : எதிர் எதிர் ஓங்கிய மலைகள், தலைவி யின் சுற்றமும் தலைவன் சுற்றமும் ஆம்; அவற்றிடையே உள்ள அப்பள்ளத்தாக்கு, தலைவன் மனையாம்; அவ்வேங்கை, தலைவியாம்; அது மலர்ந்து நிற்றல், அவன் மக்களைப் பெற்று மாண்புறுதலாம்; மலையருவிகள் இரண்டும் வேங்கைமீது வீழ்தல், இரு சுற்றத்தாரும் அவளுக்குச் செய்யும் சிறப்புக்களாம்.

1. கதிர் - ஞாயிறு, கனைசுடர் - பேரொளி, 3. அம்சினை - அழகிய கிளை. இணர் - பூங்கொத்து. ஊழ்கொண்ட - நெருங்க மலர்ந்த முழவுத்தாள் - முரசு போல் பருத்த அடி 6. வீறு - பிறவற்றிற்கில்லாத சிறப்பு. 7. திரு - திருமகள், 8. எவ்வம் - துயர். கூரினும் - மிகினும். 13. ஒரும் - அசை. 18. இனையன - இவை போலும். நினைவனள் - பிறர் அறியாவாறு மனதால் எண்ணுபவள், அனை அரும் பண்பு - அத்தகைய உயர்ந்த பண்பு.