பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

‘யாமத்தும் துயிலலள்!

பழைய தமிழ்க் குடியிற் பிறந்த பெண் ஒருத்தி தன்னைப் போன்றே சிறந்த குடியிற் பிறந்தான்் ஒருவனைக் காதலித்தாள். தாம் கொண்ட அக்காதல் உறவினைத் தம் பெற்றோர் அறியின், மனம் பொறார், அதற்கு இடையூறு விளைப்பர் என அஞ்சினர். அதனால், தங்கள் காதல் விளையாட்டை அவர் அறியாவாறே மேற்கொண்டு வந்தனர். செவிலியும், தாயும் எப்போதும் சூழ்ந்திருக்க வாழ்பவள் அப்பெண் ஆதலாலும், அவள் ஊரும் மனை யும் அரிய காவலையுடையன ஆதலாலும், ஒருவரை யொருவர் கண்டு மகிழ்தல் எளிதில் இயலுவதில்லை. அவனைக் காணாதே பலநாள் கழிக்க வேண்டி வந்தமை யால் அவள் துயர் உற்றாள். உள்ளத் துயர் மிகுதியால், அவள் உடல் தளர்ந்தது. அத் தளர்ச்சி, அவள் காதல் விளையாட்டை ஊரார்க்கு உரைத்து விட்டது. அவர்கள் அவளைப் பற்றிப் பலவாறு பேசத் தொடங்கிவிட்டனர். அவர் கூறிய அவ்வலர், அவள் தாயின் காதிற்கும்