பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 91

எட்டிற்று. பிறர் பழி கூறும் அளவு பண்பிழந்து விட்டனளே தன் பெண் என்ற நிலையினைப் பொறாத அத்தாய், அவளைக் கடுஞ்சொல் வழங்கிக் கண்டிக்கத் தொடங்கினாள். "இவ்வாறு பிறந்த ஊரும், பெற்ற தாயும் பழிக்கும் பழிச்சொற் கேட்டு வருந்துமாறு, என்னைப் பிரிந்து, மறைந்து வாழ்கின்றனனே என் காதலன் " என எண்ணி வருந்தினாள் அவள். அதனால் அவள் துயர் முன்னினும் மிக்கது. கவலையால் கண் ஒளி இழந்தது. தோள் தளர்ந்தது. பொன் போலும் நிறம் பெற்றுப் பேரழகு தோன்ற விளங்கிய உடலும் பசலை படர்ந்து அழகு கெட்டது. இவ்வாறு அவள் வருந்தினாள்.

அவள் வருத்த நிலையினைக் கண்டு கண்ணிர் உகுத்து வருந்தினாள் அவள் தோழி. இந்நிலைக்குக் காரணமாவான், அவ்விளைஞனே. இவள் உள்ளத்திற் காதற்கனலை மூட்டிவிட்ட அவன், இவளை என்றும் பிரியாது, எப்போதும் உடனிருக்குமாறு, திருமணம் புரிந்து கொண்டு, தன் மனைக்குக் கொண்டு சென்றிருப்பின், இவள் இவ்வாறு துயர் உறாள். அவன் அதைச் செய்யாத தாலேயே இவ்வளவும் நேர்ந்து விட்டது. ஆகவே, அவன் வரின் அவன் செய்த இத் தவறினை எடுத்துக்காட்டி இடித்துரைத்து வரைவிற்கு வழி செய்தல் வேண்டும் எனத் துணிந்து, அவன் வரவை எதிர்நோக்கியிருந்தாள்.

அவ்வாறு எதிர்நோக்கி இருந்தாள்பால், ஒரு நாள் அவன் வந்தான்். வந்தான்ை வணங்கி, 'அன்ப ! ஞாயிற்றின் ஒளியையும் உட்புகாவாறு தடுத்து நிறுத்துமளவு நெருங்கி வளர்ந்த மூங்கிற் காட்டையும், மூங்கில் வளர்ந்த அம் மலையின் இடையிடையே உள்ள,