பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ல் புலவர் கா. கோவிந்தன்

மணம் நாறும் நீர் நிறைந்த கனையையும், அச்சுனையில் அழகு தோன்ற மலர்ந்திருக்கும் காந்தட் பூக்குலையினை யும், நீரில் மலர்ந்து நிற்கும் அக்காந்தட் காட்சி நீர் உண்டு கிடக்கும் நாகம் போலும் தோற்றம் அளிப்பதையும் பலகால் கண்டு, கருத்திழந்து, மகிழ்ந்திருப்பையன்றோ? காண்பார்க்கு அக்காட்சி கவின் உடையதாய்த் தோன்றினும், அக்காட்சியை உண்மை நாகம் ஒன்று நீர் குடித்துக் கிடப்பதாகவே கருதிய இடியேறு, பெரிய மலைகளையும் கீழ் மேலாக்கவல்ல கொடிய காற்றோடும், பெரும் மழையோடும் தோன்றி இடிக்கத் தொடங்கவே, அவ்விடியால் எழுந்த பேரொலி, அம்மலையை அடுத்துள்ள ஊரெல்லாம் பரந்து ஒலிக்க, அவ்வொலி கேட்ட அவ்வூர்வாழ் மக்கள், அச்சத்தால் உறக்கம் ஒழித்துத் துயர் உறுவர். இதையும் நீ அறிவை யன்றோ?

“காந்தட் குலை பாம்பு போல் தோன்றியதைக் கொண்டே இடி இடிக்க, அதனால் அத்தனை கேடுகள் உண்டாதலை அறிந்த நீ, பின்னர் இல்லறமாம் நல்லறப் பயனை நல்கும் இயல்பால், இக்களவொழுக்கம், நல்லது போல் நமக்குத் தோன்றினும், அது கரந்து ஒழுகும் ஒழுக்கமே என்ற கருத்துடையராய், ஊரார் கூறும் அலரும், அதைக் கேட்டுத் தாய் கூறும் கடுஞ்சொல்லும், அக் கடுஞ் சொல் கேட்டு, உறக்கம் ஒழிந்து இவள் படும் வருத்தமும் எவ்வளவு கொடியவாம் என்பதை அறிந்து கொள்ள மாட்டாமையால், இவ்வாறு நடந்து கொள் கின்றனையோ? அல்லது அறிந்தும், இவள்பால் உனக்குக் கருணை இல்லாமையால் இவ்வாறு நடந்து கொள் கின்றனையோ?