பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 93

"உன்னைப் பிரியாது வாழ்ந்து பேரின்பம் நுகர்தல் வேண்டும் எனும் வேட்கை நிறைவேறாமையால் வருந்திய என் தோழியின் கண்கள், அவை பண்டு பெற்றிருந்த, நீலமலர் நிகர்க்கும் பேரழகு கெட்டு, ஒளி இழந்து தோன்றுவதை நீயே காண். அவை, அவ்வாறு அழகிழந்து அழியுமாறு விடல், அவை, நீர் அறா அருவிகள் நீண்டு ஒடும் நம் மலையிடத்துச் சுனைகளில் மலர்ந்த நீல மலர்க்கு நிகராய் உள்ளனவே! என்ற நினைவால் நின் உள்ளத்து எழுந்த பொறாமையின் விளைவுதான்ோ! நின் பிரிவாலாய துயர் அளவிறந்து பெருகவே, இனி என் உயிர் இவ்வுடலில் வாழாது, இதுவே என் வாழ்நாளின் இறுதிக் காலமாம்! எனக் கூறிப் பெருந்துயர் கொள்ளுமளவு, அவள் தோள்கள், பருத்துத் திரண்டிருந்த தம் பண்டைய நிலை இழந்து, மெலிந்து தளர்ந்து அழகிழந்து தோன்று வதை, அன்ப! நீயே காண். அவை அவ்வாறு அழகிழந்து தளர்ந்தது, அவை, யானையை வென்று புலி உலாவும் என் மலையில் வளர்ந்திருக்கும் மூங்கில்போல் தோன்று கின்றனவே! என, எண்ணும் நின் உள்ளப் பொறாமையின் விளைவுதான்ோ? நீ வரைந்து கொள்ளாமையால் வந்துற்ற துயரையும், அதைக்கண்டு தாய் கூறும் கடுஞ்சொல்லையும் தாங்க மாட்டாது, ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவிலும் உறக்கம் கொள்ளாது வருந்தியதால், அவள் உடல், தான்் பண்டு பெற்றிருந்த பொன்னிறம் இழந்து, பசலை படர்ந்து தோன்றுவதையும் நீ காண்பாயாக! அவள் உடலழகை இவ்வாறு உருக்குலைத்துச் சிதைத்ததும், அவள் மேனி, ஞாயிற்றைத் தீண்டும் உயர்ச்சியுையும், வண்டுகள் ஒலிக்கும் குகைகளையும் உடைய நம் மலையில், எரி போலும் நிறத்தவாய் மலரும் வேங்கையின் மலரை