பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ↔ புலவர் கா. கோவிந்தன்

ஒத்துளதே! என்ற பொறாமையின் விளைவுதான்ோ? எனப் பலப்பல கூறி அவன் பிழையினைச் சுட்டிக்காட்டி னாள்.

இவ்வாறு, அப்பெண்ணின் கேட்டிற்கும், அவள் துன்பத்திற்கும், அவ்விளைஞன் மனத்திடையே தோன்றிய பொறாமையே காரணமாம் எனும் கருத்துப்படக் கூறினாளேனும், அவன் பொறாமை கொள்ளும் அத் துணைப் புல்லியன் அல்லன். ஆகவே, வரைவு முயற்சி மேற்கொள்ளாது வாளா இருத்தற்கு, அவள்பால், அவனுக்கு அன்பின்மையே காரணமாம் என்பதைக் குறிப் பால் உணர்த்தி, அவனை அன்பற்றவன், அருளற்றவன், ஆற்றவும் கொடியவன், என்றெல்லாம் கூறிக் கடிந்தாள்.

தோழி இவ்வாறு கடுஞ்சொல் பல வழங்கி, அவளை வரைந்து கொள்ளா அவன் தவறினை எடுத்துக் காட்டவே, கண்டு காதல் கொண்ட அன்று, அவளுக்கும் அவனுக்கும் இடையே தோன்றிய அன்பு, அவன் வரைந்து கொள்ளவாராமையால் குறைதல் கண்டு, களவொழுக்கத் தைக் கைவிட்டுக் கடிமணம் புரிந்து வாழத் துணிந்தான்் அவ்விளைஞன். உடனே ஊர் சென்று, உற்றாரையும், ஊர்ப் பெரியோரையும் மணம் பேசி வருமாறு, அப் பெண்ணின் பெற்றோர்.பால் அனுப்பினான். அவள் பெற்றோரும், அவன் விரும்பும் அன்றே, அவளை அவனுக்கு மணம் முடிக்க இசைந்தனர். இதை அறிந்து அகம் மகிழ்ந்த தோழி, தான்் அவனைக் கண்டதையும், கண்டு கடுஞ்சொற் கூறி, அவன் பிழையை எடுத்துக் காட்டியதையும், அதன் பயனாக, அவன் வரைவு வேண்டி வர, அவள் பெற்றோர் அதற்கு இசைந்ததையும், அப்பெண்ணிற்கு அறிவித்து அவள் கவலையைப் போக்கினாள்.