பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி * 95

தோழி, அவ்விளைஞனுக்குக் கூறிய அறவுரையினை யும் அதன் பயனையும் அழகாக அமைத்துப் பாடுகிறது இப்பாட்டு; விடியல் வெங்கதிர் காயும் வேய்அமல் அகல்அறைக் கடிசுனைக் கவினிய காந்தளங் குலையினை அருமணி அவிர்உத்தி அரவுநீர் உணல் செத்துப் பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைபெயல் உருமுக்கண் உறுதலின் உயர்குரல் ஒலிஓடி 5 நறுவிய நனஞ்சாரல் சிலம்பலின், கதுமெனச் சிறுகுடி துயில் எழுஉம் சேண்உயர் விறல்வெற்ப!

கால்பொர நுடங்கல கறங்கு இசைஅருவி,நின் மால்வரை மலிசுனை மலர்ஏய்க்கும் என்பதோ! புல்லாராப் புணர்ச்சியால் புலம்பிய என்தோழி, 10 பல்இதழ் மலர்உண்கண் பசப்பநீ சிதைத்ததை?

புகர்முகக் களிறொடு புலிபொருது உழக்கும்நின் அகன்மலை அடுக்கத்த அமைஏய்க்கும் என்பதோ! கடை எனக்கலுழும் நோய் கைம்மிக என்தோழி தடையின திரண்டதோள் தகைவாடச் சிதைத்ததை? 15

சுடர்உற உறநீண்ட சுரும்புஇமிர் அடுக்கத்த விடர்வரை எரிவேங்கை இணர்ஏய்க்கும் என்பதோ! யாமத்தும் துயிலலள் அலமரும் என்தோழி, காமரு நல்லெழில் கவின்வாடச் சிதைத்ததை

எனவாங்கு, 20

தன்தீமை பலகூறிக் கழறலின் என்தோழி மறையில்தான்் மருவுற மணந்த நட்பு அருகலான்