பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புலவர் கா. கோவிந்தன்

பிறைபுரை நுதல் அவர்ப்பேணி, நம் முறைவரைந் தனர்.அவர் உவக்கும் நாளே."

தலைவன் வரைந்து கொள்ளாமையால் தலைவி வருந்த, தோழி, அவள் துயர் கூறி அவனை வரைவு கடாவ, அது கேட்டு அவன் வரைவொடு வரத், தமர் வரைவு நேர்ந்தமை, தோழி தலைவிக்கு உரைத்தது எனும் துறையமைய வந்துளது இச்செய்யுள்.

உள்ளுறை: மலைப்பாறை, தலைவியின் மனை; சுனையிடத்துக் காந்தள், சுற்றத்தார் பேண வளரும் தலைவி, மணம்தரும் காந்தள் பாம்பு போல் தோன்றல், இல்லறப் பயனைத் தரும் களவொழுக்கம் பிறர்க்குத் தீங்கு போல் தோன்றல். இடியேற்றின் ஒலி மலையிடமெல்லாம் ஒலித்தல், அயலார் கூறிய அலர் கேட்ட தாய் வழங்கிய கடுஞ்சொல். ஊரார் உறக்கம் ஒழிந்தது; தாயின் சுடு சொல் கேட்ட தலைவி உறக்கம் ஒழிந்தது.

1. வேய் = மூங்கில், அமல் - நிறைந்த, 2. கடி - மணம், 3. அருமணி- அரிய மாணிக்கம், அவிர்- விளங்குகின்ற, உத்தி-பாம் பின் படத்தில் உள்ள வளைந்தகோடு. செத்து- கருதி,4. மிளிர்த்தல் - கீழ் மேலாகப் புரட்டல். 5. உருமு - இடி, 6. வீ - மலர், வீய , மலர்களை உடைய, சிலம்பல் - ஒலித்தல். 8. கால் - காற்று. நுடங்கல - அசையா; கறங்கு - ஒலிக்கும். 10. புல் ஆராப் புணர்ச்சி - புல்லப் புல்ல வேட்கைமிகும் புணர்ச்சி. 12. புகர் - புள்ளிகள். 13. அமை- மூங்கில், 14. கடை என- இதுவே என் வாழ்நாளில் இறுதிக் காலமாம் என:கலுழும்- வருந்தும், 15. தடையின - பருத்த 16. சுடர் உற- ஞாயிற்றைத் தீண்ட உறநீண்ட-மிக நீண்ட 17. எரி வேங்கை - நெருப்புப் போலும் நிறம் பொருத்திய பூக்களைப் பூக்கும் வேங்கை மரம், 21. கழறல் - இடித்துக் கூறல். 22. மறையின்- களவொழுக்கக் காலத்தில். 23. புரை - ஒத்த 24 முறை - உறவினர்.