பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

‘பைதலேன் யானாக!”

அறிவு, உரு, திரு ஆகியவற்றால் சிறந்த ஆண்மகன் ஒருவன், பேரழகும் பெருங்குணமும் படைத்த பெண் னொருத்தியைக் கண்டு காதல் கொண்டான். அவர்கள் காதல் வளரத் துணை புரிந்தாள் அப் பெண்ணின் தோழி. ஆயினும் அவர்கள் காதல் வாழ்க்கையை, அத்தோழி ஒருத்தி நீங்கப் பிறர் எவரும் அறியார். ஆதலின், தாம் விரும்பும் போதெல்லாம் ஒருவரையொருவர் கண்டு மகிழ்தல் அவர்க்கு இயலாதாயிற்று.

தன் காதலியைக் கானப் பலநாள் முயற்சி செய்தான்் அவ்விளைஞன். ஆனால், ஒவ்வொரு நாளும், அவன் முயற்சி வீணாயிற்று. ஒரு நாள், ஊர்க்காவல் கடுமையாக இருந்தது. அதனால், அன்று ஊருள் துழையாமலேயே திரும்பி விட்டான். மறுநாள், அவன் அவ்வூருக்குப் புதியவன் ஆதலின், அவ்வூர் நாய்கள் அவனைக் கண்டதும் குரைத்துத் துரத்தத் தொடங்கவே, தன் வருகையை ஊரார் உணர்ந்து கொள்வர் என அஞ்சி

குறிஞ்சி-7