பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 - குறிஞ்சித் தேன் இல்லே. ஆசையினலே ஒவ்வொன்றுக்கும் உவமை கூறப் புகுந்த புலவரால் இந்த ஒளிக்கு உவமை கூற முடியவில்லே. சேவடிக்குத் தாமரையைக் கூறியும் மேனிக்குப் பவழத்தைக் கூறியும் விளக்கிருதுர், அவர் தம் அகக் கண்ணிலே சேவடியை நிறுத்திக் கண்டார்; திருமேனியை நிறுத்தித் தரிசித்தார்; தமக்கும் காட்டி ஞர். அப்பால் அவனுடைய ஒளியை தினேத்தார். எல்லவற்றையும் தனக்குள் அடக்கிக்கொண்ட அந்த ஒளி வெள்ளத்திலே மூழ்கிப்போதர். அதற்கு உவமை கூற வேறு பொருள் ஏது? வெள்ளத்தில் மூழ்கிவிட்டால் வேறு நினேவுதான் வருமா? சிறிய விளக்கை ஏற்றும்போது அதன் திரியில் சுடர் தோன்றுகிறது; அந்தச் சுடரைச் சுற்றி ஒர் ஒளி வட்டம் தோன்றுகிறது; பிறகு அதன் ஒளி எங்கும் பரவி நிற்கிறது. அப்படி முருகன் திருவடி.யை முதலில் சுட்டிக் காட்டினர். அதிலிருந்து விரிந்த திருமேனிப் பரப்பின் செம்மையிலே நம் கருத்தை நாட்டினுர், அதிலிருந்து பின்னும் விரிந்து திகழும் ஒளிமயமான சூழலேக் காட்டினர். சேவடியிலிருந்து முழுமையான மேனியையும் அதிலிருந்து அகண்டமான ஒளியையும் காணும் நெறியே அகன்று படரும் நெறி; வர வர விரியும் நெறி. அப்படியின்றி வர வரக் குறுகும் நெறி யிலே செல்லுதல் தெய்வ நெறி யன்று; உலக நெறி; மருள் நெறி. சேவடி பற்றினுல் செம்மேனி கான லாம்; செம்மேனி கண்டால் திகழ் ஒளி தெரியும். சேவடிக்கு நிறமும் வடிவும் உண்டு; மனம் அந்த நிறத்தையும் வடிவையும் பற்றிப் படரும். அதன் பின் ந்த ஒளி ாருளின்