பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவலங் கொடியோன் 7 னுக்குச் செவ்வேள் என்று திருநாமம் உண்டு. அவ. னுடைய சேவடிக்குத் தாமரையை உவமை கூறித் தொடங்கினர் புலவர். தாமரையைக் காட்டி, இப் படித்தான் முருகன் சேவடி இருக்கும் என்ருர். அப் படியே அவன் செம்மேனிக்கும் ஓர் உவமையைக் காட்டுகிருர். பவழம் போன்ற சிவந்த மேனியை உடையவன் முருகன் என்கிருர். செம்மைக்குப் பவழத்தை உவமை கூறுவது மரபு. அருணகிரிநாதர் முருகன் திருவடிச் செம்மைக்குப் பவழத்தை ஒப்பாக்கு கிருர். மாத்ருகாபுட்ப மாேைகாலப்ர வாளபாதத்தில் ஆணிவேனே என்ற திருப்புகழில், அழகான பவழம் போன்ற பாதம்’ என்று முருகன் திருவடியைப் பாராட்டுகிருர்" தாமரை போன்ற சேவடியையும் பவழம் போன்ற மேனியையும் படைத்த முருகனுடைய உருவம் ஒளி மயமாக இருக்கும். ஒளி படைத்தமையால்தான் வானவர்களுக்குத் தேவர் என்ற பெயர் வந்தது. தேவாதி தேவனகிய முருகனே பேரொளி படைத்த திருவுருவம் பெற்றவன். அந்த ஒளியை, சேண் விளங்கு அவிர் ஒளி' என்று நக்கீரர் பாராட்டுகிருர், சேவடியின் செம்மையும் மேனியின் செம்மையும் மனிதர்களிடத்திலும் அருமையாகக் காணலாம். ஆல்ை ஒளியை அவர்களிடம் காணமுடியாது. முருகன் இடையீடில்லாமல் விளங்கும் ஒளி உருவத் தான். கதிரவனுக்கும் இல்லாத சிறந்த ஒளி சோதிப் பிழம்பாக நிற்கும் பெருமான் ه التيّي ويكي முருகன் ஆதலின் அவனுடைய ஒளிக்கு உவமையே