பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 குறிஞ்சித் தேன் அனியேல்லாம் ஆடையின் பின் என்று சொல்லார்கள். ஆதலின் ஆடையைச் சொல்ல வருகிருர். அதற்கும் உபமானம் கண்டு சொல்கிறர். அவனுடைய ஆடைகூடச் சிவந்ததுதான். குன்றி மணியைப் போலச் சிவந்தது. குன்றி மணியை ஒக்கும் உடையை உடையவன் முருகன்’ என்று பெருந்தேவனர் கூறுகிருர். முருகன் திருக்கரத்தில் வேலே ஏந்தியிருக்கிறன். முருகன் என்று நினேத்தாலே வேலும் நினேவுக்கு வருகிறது. அவனுடைய திருக்கரத்தில் அமர்ந்த வேல் நீண்ட வேல். அவன் அடிதொட்டு இடை தொட்டு முடியளவும் நீண்டு நிற்கும் வேல். பகை வர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களேத் தேடிச் சென்று கருவறுக்கும் நெடுவேல். அது சுடர்விடுகிறது. அன்பர்கள் காணக் காண அழகு தரும் சுடர் வேல் அது. அஞ்சுடர் நெடுவேல்; வீர விளையாடல்களேச் செய்த வேல். கிரவுஞ்சகிரியை ஊடுருவித் துளேத்த வேல் அது. அந்த மலே எங்கும் பறந்து சென்று மக்களுக்குத் துன்பத்தை விளேவித்தது. அதன்மேல் முருகன் வேலே ஏவினன். அதன் நடுவிடத்திலே சென்று ஊடுருவிப் பிளந்துவிட்டது வேல். குன்றினது நெஞ்சு பகும்படியாக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் அது. அதை முருகன் தன் திருக்கரத்திலே வைத் திருக்கிருன். வீரத்துக்கு அடையாளம் வேல். அந்த வீரத் தாற் பெற்ற வெற்றிக்கு அடையாளம் கொடி. முருகன் சேவற் கொடியை உடையவன். அடியார்களுடைய