பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவலங் ଗିଜ୍ଜଞ୍ଜିଳଙ୍ଗି 11 துன்பத்தைப் போக்கி இன்பம் காட்டும் திறம் உடையவன் என்பதை வேலும் சேவலும் புலப் படுத்துகின்றன, அசுரர்களாகிய இருளேப் போக்கியது அஞ்சுடர் நெடு வேல். இருள் போனல் விடியும் அல்லவா? இருள் அகன்றது; இனிப் பயம் இல்லை; விடிந்துவிட்டது” என்பதைத் தன் குரலால் எடுத்து இயம்புவது சேவல். துன்ப நீக்கத்தைக் காட்டுவது குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் கெடுவேல் இன்ப ஆக்கத்தைக் காட்டுவது கே வலங்கொடி. துன்பத்தை நீக்கும் ஆற்றலும் இன்பத்தை ஆக்கும் அருளும் உடைய முருகனே அடைந்தால் நம் துயர்கள் நீங்கி இன்பம் உண்டாகும். தேவர்களேச் சிறையில் அடைத்து அவர்க ளுடைய நாட்டைப் பற்றிக் கொண்டு, யாவருக்கும் துன்பத்தை உண்டாக்கின்ை சூரன். அவனுக்குத் துணைவர்களாகப் பல அசுரர்கள் இருந்தார்கள். முருகன் அவர்களே யெல்லாம் அழித்து யாவருக்கும் இன்பத்தை உண்டாக்கின்ை. இது எந்தக் காலத் தில் நிகழ்ந்ததோ தெரியாது. ஆல்ை இன்றும் முருகனுடைய திருவருளால்தான் உலகமே வாழ்வைப் பெறுகிறது. உயிர்களுக்கு வரும் இன்னல்களைப் போக்கி நன்மையைத் தந்து என்றும் பாதுகாக்கும் காவற் காரகை இருக்கிருன் முருகன். அவனுடைய அருட்காப்பு இல்லேயால்ை உலகம் ஒருநாள் கூட வாழாது. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கிருன்; காற்று வீசுகிறது; நாம் மூச்சு விடுகிருேம்; நம் கைகால் கள் இயங்குகின்றன; மரம் செடி கொடி, பறவை, விலங்கு, மக்கள் யாவரும் தங்கள் தங்கள் இயல்புக்கு