பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவலங் கொடியோன் 13 கோழிக் கொடியையுடையவன் காப்பாற்றுகிருன். உலகத்துக்கு நல்ல பொழுதாக விடிகிறது. இப்படிச் சொல்வதில் ஒரு நயம் இருக்கிறதல்லவா? முருகன் ஆறு திருமுகங்களே உடையவன். அவ னுடைய சம்பந்தமுள்ள பொருள்களே ஆறு ஆறகச் சொல்வதில் இன்பம் காணுவது அன்பர்கள் இயல்பு; அவனுடைய மந்திரத்தில் ஆறு எழுத்துக்கள் உள் ளன. அவனே வழிபடுவோர் பூசிக்கும் சக்கரத்தில் ஆறு கோணங்கள் உள்ளன. அவனுக்குரிய படை வீடுகள் ஆறு. அருணகிரி நாதர் முருகன் அடியார் களேப் பற்றி ஒரிடத்தில் கூறுகிறர். அவர்கள் முருகன் திருநாமத்தைச் சொல்லித் திருநீற்றை உடம்பு முழுவதும் பூசிக்கொள்கிருர்கள்; ஆறுமுகத்தை' நின்ந்து பூசிக்கொள்கிறர்கள்; ஆறுமுகத்தை ஆறு தடவை நினேந்து அணிகிறர்களாம். ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்-என்றுபூதி ஆகம்அணி மாதவர்கள் என்று திருப்புகழில் அருணகிரி நாதர் பாடுகிருர். இந்த குறுந்தொகைப் பாட்டில் ஆறு அடிகள் அமைந்திருக்கின்றன. பெருந்தேவனர் ஆறுமுக னுக்கு ஆறு அடிப்பாட்டாகப் பாடவேண்டுமென்று நினைந்து பாடினரோ, இல்லையோ, பாட்டைப் படிக் கும் நமக்கு ஆறு அடிகள் அமைந்ததற்கு ஒரு பொருத்தம் தோன்றுகிறது. அது மாத்திரம் அன்று. இந்தப்பாட்டில் முருகனே ஆறு வகையாகக் காட்டு கிருர். அவர் நினேந்திராவிட்டாலும் அந்தப் பாட்டின் அமைதி நம்மை அப்படி நினத்துப் பொருத்தங்