பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 குறிஞ்சித் தேன் கண்டு பூரிக்கச் செய்கிறது. முருகன் தாமரை போன்ற சேவடியை உடையவன், பவழம் போன்ற மேனியை உடையவன், திகழும் ஒளியை உடையவன், குன்றி மணியைப் போன்ற உடையை உடையவன், அஞ்சுடர் நெடுவேலேயுடையவன், சேவலங்கொடியை உடையவன் என்று அவனேப் பற்றிய ஆறு செய்தி களே இந்தப் பாட்டிலே காண்கிருேம் அல்லவா? அடி, மேனி, ஒளி என்ற திருவுருவத்தோடு ஒட்டிய அகத்தொடர்புப் பொருள் மூன்றும், உடை, வேல், சேவல் என்ற திருவுருவத்தோடு ஒட்டாத புறத் தொடர்புப் பொருள் மூன்றுமாக ஆறு பொருள்களின் மூலம் முருகன் திருக்கோலத்தை நிவேத்துப் பார்க்கும் வகையைப் பாட்டிலே பெறுகிருேம். அடியிலே வைத்த கண்ணே மெல்ல மெல்ல மேலேறச் செய்து, முருகன் ஏந்தி நிற்கும் சேவலங் கொடி உயரப் பறக்கும் நிலேயைப் பெருந்தேவனர் காட்டினர். வரவர நம் பார்வை உயர வழி காட்டினர். இந்த அழகிய பாட்டை, எல்லாக்குற்றமும்தீர்ந்த செய்யுள் என்று, யாப்பருங்கலக் காரிகை என்ற இலக்கண நூலுக்கு உரை வகுத்த குணசாகரர் என்ற புலவர் சொல்கிறர்.