பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் புலவர்கள் முகங்களில் ஈயாடவில்லை. அவர்கள் இவ்வளவு காலமாக இத்தகைய அவமா னத்தை அடைந்ததே இல்லே. ஒவ்வொரு புலவரும் தத் தமக்குத் தோன்றிய கருத்தை வைத்துப் பாவைப் பாடிப் பாண்டிய மன்னனிடம் காட்டினர். முன்பெல் லாம் அவர்களுடைய பாடல்களேக் கண்டு களித்து இன்புறும் இயல்புள்ள அவனுக்கு இப்போது அவற் றைக் கண்டபோது திருப்தி உண்டாகவில்லை. ஒன்றேனும் யான் உணர்ந்ததைப் புலப்படுத்த வில்லே?" என்று சொல்லிவிட்டான். தெய்வப் புலமையை உடையவர்கள் என்று சங்கப் புலவர்களைப் பாண்டியன் எண்ணி வழிபட்டான். தமிழுலகமும் அவ்வாறே மதித்தது. இப்போது அந்தத் தெய்வப் புலமைக்கும் குறையுண்டு என்பது பாண்டியனுக்குப் புலப்பட்டது. நாற்பத்தொன்பது புலவர்கள் இருந்தும் என் எண்ணத்தை உணர்ந்து கவி பாட இயல வில்லேயே புலமைக்குப் பேரரசர்கள் என்று மதிக்கும் இவர்களுக்கே இயலாதென்றல், தமிழுலகில் வேறு யார் இந்த எண்ணத்தை நிறைவேற்றப்போகிருர்கள்?? என்று ஒரு கணம் நினைத்தான். ஆனல் அவன் எண்ணம் அதோடு நிற்கவில்லை. தமிழுலகம் அவ்வ ளவு வறியதாகிவிட்டதா? நமக்குத் தெரியாமல் எங்கே னும் ஒரு மூலேயில் திருவருட் பலம் பெற்ற புலவன் ஒருவன் இருத்தல் கூடும். அவனைக் கண்டு பிடிக்க கு-3