பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 குறிஞ்சித் தேன் இப்போது தக்க சமயம் கிடைத்திருக்கிறது: என்று சிந்தித்தான். உடனே ஆயிரம் பொன்னே எடுத்தான். ஒரு கிழியில் வைத்துக் கட்டினன். சங்கமண்டபத்தின் எதிரே ஒரு கோல் நாட்டி அதில் அந்தப் பொற்கிழி யைத் தொங்கவிட்டான். 'என் கருத்தை அறிந்து கவிதை பாடுபவருக்கு இந்தப் பொற்கிழி உரியது?? என்று பறை அறைவித்தான். புலவர்களின் புலமைச் செருக்கை அடக்க வந்தது போல அந்தக் கோலின் மேல் பொற்கிழி தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு கண்டு புலவர்கள் பொருமினர்கள். பாண்டிய மன்னன் கருத்தை யாரும் உணர வில்லை. அவன் அன்று ஒரு நாள் மாலே தன் அரண் மனேயின் மேல்மாடத்தில் உலவிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நறுமணத்தை அவன் உணர்ந்தான் . அதுகாறும் அவன் அறிந்திராத மணமாக இருந்தது. அது வந்த திசையை நோக்கினன். அவனுடைய பட்டத்துத்தேவி அங்கே தன் கூந்தல ஆற்றிக்கொண் டிருந்தாள். உத்தமப் பெண்மணியாகிய அவளுடைய கூந்தலிலிருந்து வந்த மணம் அது என்பதை அவன் உணர்ந்து வியந்தான். இறைவனுடைய படைப்பில் உள்ள அற்புதத்தை எண்ணி எண்ணிப் பரவசம் அடைந்தான். இந்த உண்மையைப் பாட்டிலே வைத்துப் பார்க்க வேண்டுமென்ற வேட்கை ുഖ് னிடம் எழுந்தது. தன் மனைவியின் கூந்தல் மன முடையது என்பதை விளம்பரப்படுத்த அவன் விரும்ப வில்லை. இறைவனுடைய படைப்பில் நன்மங்கையர் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டு என்ற உண்மையை வெளிப்படுத்தவே அவன் விரும்பினுன்,