பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் 17 அதை வெளிப்படையாகச் சொல்லவும் நாணினன். ஆகவே, நான் ஒர் அரிய மணத்தை உணர்ந்தேன், அது பற்றிய என் கருத்தைப் பாட்டிலே பாடிக் கொடுக்க வேண்டும்?? என்ற வேண்டுகோளேச் சங்கப் புலவர்களிடம் சமர்ப்பித்தான். அவன் சிந்தை யில் எண்ணியதைப் பாடவேண்டும். இதைச் சிந்தா சமுத்தி என்று சொல்வார்கள். சங்கப் புலவர்கள் பாண்டிய மன்னன் கருத்தை உணர்ந்து பாடவில்லை. நம்மினும் புலமையிற் சிறந்தவர் யாரும் இல்லை?” என்ற தருக்கோடு இருந்த அவர்களுக்கு நாணம் உண்டாவதற்காக, இந்த நிகழ்ச்சி ஆண்டவனல் அமைந்தது என்று அன்பர்கள் எண்ணினர்கள். அக் காலத்தில் மதுரைத் திருக்கோயிலில் சோம சுந்தரக் கடவுளேப் பூசிக்கும் ஆதி சைவர்களுக்குள் தருமி என்ற பிரமசாரி ஒருவன் இருந்தான், இறை வனுடைய பூசை வழிவழியாக நடைபெறவேண்டும் என்ற எண்ணத்தால், அவன் மணம் செய்துகொள்ள விரும்பினன், ஆல்ை அவனிடம் போதிய பொருள் இல்லே. தனக்குரிய பெரும்பொருள் மதுரைப் பெரு மானே என்று எண்ணி வாழ்பவன் ஆகையால், அவன் தன் விருப்பத்தை அந்த இறைவனிடம் விண்ணப் பித்துக் கொண்டு வந்தான். இறைவன் தக்க தருணத்தை நோக்கி இருந்தான் போலும்! - பாண்டியன் கருத்தறிந்து பாடும் கவிக்கு ஆயிரம் பொன் கிடைக்கும் என்ற செய்தி தமிழுலகம் முழுவ தும் பரவியது. தெய்விகப் புலமையைத் தோல்வி யுறச் செய்த அந்தக் கிழி தெய்வத்தின் புலமையையே