பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 குறிஞ்சித் தேன் எதிர்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தது. பாண்டி யன் எண்ணமும் தருமியின் எண்ணமும் ஈடேறவும், நக்கீரரென்னும் பெரும் புலவருடைய அகந்தை யைப் போக்கி ஆட்கொள்ளவும், திருமுருகாற்றுப் படை முதலிய நூல்கள் அப்புலவர் பெருமானுல் தமிழுலகுக்குக் கிடைக்கவும், எல்லாவற்றுக்கும் மேலா கத் தன்னுடைய தமிழ்க் கவி ஒன்றைத் தமிழ் உலகம் பெற்று உவக்கவும் திருவுள்ளம் கொண்டான் ஆலவாய்ப் பெருமான். 'கொங்குதேர் வாழ்க்கை' என்று தொடங்கும் செய்யுள் ஒன்றை எழுதித் தருமி யிடம் வழங்கி, பாண்டியனிடம் காட்டிப் பொன் பெறுக’ என்று தெரிவித்தருளினுன். தருமி அந்தச் செய்யுளேப் பாண்டியனிடம் காட்டி ன்ை. மன்னன் அதைக் கண்டான்; தன் கருத்தைத் தமிழ் மரபுக் கேற்பப் பொதுவகையில் அமைத்துவைத் திருப்பதைக் கண்டான். அதைத் தலேமேல் வைத்துக் கொண்டான். கிழியை எடுத்துக் கொள்க' என்ருன். தருமி விரைந்து சென்று கிழியை அறுக்கப் போகும்போது நக்கீரர் அவனேத் தடுத்து. இந்தப் பாட்டில் குற்றம் உண்டு. உன்னேப் பரர்த்தால், இதைப் பாடினவகைத் தோற்றவில்லே. இதைப் பாடித் தந்த புலவனே அழைத்து வா' என்ருர், தருமி துயரம் அடைந்து இறைவனிடம் சென்று விண்ணப்பிக்க, ஆலவாய் அண்ணல் புலவன் வேடய பூண்டு தமிழ்ச் சங்கத்துக்கு வந்து, அந்தப் பாட்டில் உள்ள குற்றம் யாது என்று கேட்டான். நக்கீரர், இதில் சொற் குற்றம் ஒன்றும் இல்லை. பொருட் குற்றம் உண்டு. பெண்களின் கூந்தலுக்கு