பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குறிஞ்சித் தேன் செய்யுள் குறுந்தொகையில் இரண்டாவது பாட்டாக அமைந்திருக்கிறது. பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப் பொற்கு னை தருமிக் கற்புடன் உதவி என் உளம் குடிகொண் டிருப் பயன் அளிக்கும் கள்ளவிழ் குழல்சேரி கருனோம் பெருமான் என்று கல்லாடம் என்ற நூல் இந்த வரலாற்றைக் குறிக்கிறது. பிற நூல்களிலும் புலவர்கள் இந்த வரலாற்றைப்பற்றிச் சொல்லியிருக்கிறர்கள். ஆலவாய் இறையனர் தருமியென்னும் பிரம சாரிக்குப் பொற்கிழி வாங்கிக்கொடுத்த சிந்தா சமுத்தி அகவல்’ என்று இந்தப் பாட்டைக் குறிப்பிடுவார், தமிழ் நாவலர் சரிதையைத் தொகுத்த புலவர், % பாண்டிமா தேவியின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென்று சொன்னல் அது உத்தம மகளிர் எல்லோருக்கும் சாராது. பாண்டிய மன்னன் அவ் வாறு ஒருவரைச் சுட்டிப் புகழ்வதை விரும்பவில்லை. ஆதலின் பொது வகையில் இந்தச் செய்தியைச் சொல்லவேண்டும். உத்தம மகளிர் கூந்தலில் இயற்கை யாகவே நறுமணம் உண்டு என்று பொது வகையில் சொல்லலாம். ஆல்ை அது கவிதை ஆகாது. உள்ளதை உள்ளபடி சொல்வது மாத்திரம் போதாது. அதை அழகாகச் சொல்ல வேண்டும். கூந்தலின் இயற்கை மணத்தைப்பற்றிச் சொன்னலும் அதற்கு நிலைக்களமாக ஒரு காட்சியை அமைத்துக் காட்டினல் தான் அழகு ஏற்படும்.