பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் 21 இந்தப் பாட்டு ஒரு நாடகக் காட்சியையே சித் திரிக்கிறது. காதலன் ஒருவன் தன் காதலியின் கூந்தல் நறுமணம் உடையதென்று வியக்கிருன். 'உன் கூந்தல் அதிசயமான மணம் உடையது” என்று அவளிடம் சொன்னல் அவளுக்கு நாணம் உண்டா கும். நன்ருகப் பழகியவர்களே நேருக்கு நேர் புகழ்வது தக்கதன்று. ஆகவே, வேறு வகையில் அந்தப் பாராட்டை வெளியிடுகிறன். அங்கே அருகில் பறக் கும் வண்டைப் பார்த்துச் சொல்வதுபோலச் சொல் கிருன். நன்மலர் பூத்த கொடியும் செடியும் மரமும் அடர்ந்த சோலேயில் முதல் முறையாக அந்தக் காதலனும் காதலியும் சந்தித்தார்கள். இந்தப் பிறவி யில் அவர்கள் இதற்குமுன் சந்தித்தது இல்லே ஆனல் அவர்களிடையே உள்ள தொடர்பு பிறவிதோறும் இருந்து வருவது. ஒவ்வொரு பிறவியிலும் கணவன் மனேவியராக அவர்கள் இருப்பவர்கள். இந்தப் பிறவி யில் அவனும் அவளும் சந்திக்கும் வரையில் தனியே வாழ்ந்தார்கள். அவன் அவளுக்காகக் காத்திருந் தான்; தன்னே அறியாமலே காத்திருந்தான். அவ ளும் அவனுக்காகக் காத்திருந்தாள்; அது அவளுக்கே தெரியாது. இருவரையும் இயக்கும் ஊழ்வினை நடு நின்று அவர்களேச் சேர்த்து வைக்கும் செவ்விக்காகக் காத்து நின்றது. - இன்று அந்தச் செவ்வி வந்துவிட்டது. இந்தக் குறிஞ்சி நிலச் சோலேயிலே அவர்கள் சந்தித்தார்கள். இதற்குமுன் அவ்விருவரும் யார் யாரையோ சந்தித் திருக்கிருர்கள்; பார்த்திருக்கிருர்கள். ஆல்ை அந்தப்