பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வை பொதுப்பார்வை. மரத்தையும் மட்டையை யும் மலேயையும் ஆற்றையும் பார்ககும் பார்வை; உள் ளத்தோடு ஒட்டாத பார்வை. இப்போது ஒருவரை ஒருவர் பார்த்த பார்வைதான் பார்வை. அவர்களு டைய கண்கள் ஒன்றையொன்று கவ்வின. கண்க ளென்னும் சாளரத்தின் வழியே உள்ளங்கள் பார்த் துக் கொண்டன; ஒன்று பட்டன. இவ்வளவு காலம் காத்திருந்த உள்ளங்கள் கலந்தன. ஒன்றற்கு ஒன்று இன்றியமையாதவை அவை. ஒன்றுக்காகவே மற். ருென்று இணைப்பாகப் படைக்கப்பட்டது. ஆகையால் இரண்டு உள்ளமும் உடனே ஒன்றுபட்டன; இயற்கை யாக ஒன்றுபட்டன; பிரிக்க முடியாமல் இணேந்தன. நல்ல நிலத்தில் விளேந்த மஞ் ளே அரைத்து வைக்கிருர்கள். எங்கோ கரம்புநிலத்தில் உள்ள சுக் காங் கல்லிலிருந்தோ, கடலில் தோன்றிய கிளிஞ்சலி லிருந்தோ சுண்ணும்பை உண்டாக்குகிறர்கள். அரைத்த மஞ்சளும் நீருன சுண்ணும்பும் முன்பு சேர்ந்து ஒரு நிலத்தில் விளேயவில்லே, ஆளுல் இரண் டும் இணைந்தபோது அங்கே செம்மை தோன்றுகிறது. அந்தச் செம்மை வண்ணத்தை உண்டாக்கும் பண்பு தனித்தனியே சுண்ணும்பிலும் மஞ்சளிலும் பிரிந்து நின்றது. இப்போது இணைந்தபோது அந்தச் செம்மை வெளிப்படுகிறது. ஆடவனும் மடமங்கை யும் ஒன்றுபடுவதற்கு முன் காதல் அவரூடே ஒளித் திருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த போது அது வெளிப்பட்டது. கலந்த மஞ்சளேயும் சுண்ணும்பையும் பிரிக்க முடியாததுபோல அவ்விரு வரையும் இனிப் பிரித்தல் இயலாது.