பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் - 23. தெய்வம் நடுநின்று கூட்டியமையால் இந்தக் கூட்டுறவைத் தெய்வப் புணர்ச்சி என்று சொல்வார்கள். தம்முடைய முயற்சியின்றியே சந்தித்து இயற்கையாக ஒன்றுபட்டமையால் இயற்கைப் புணர்ச்சி என்றும் சொல்வார்கள். அகப் பொருளில் களவு என்ற பெரும் பிரிவின் முதற் பகுதி இந்த இயற்கைப் புணர்ச்சிதான். இந்தப் பகுதியில் பல நிகழ்ச்சிகள் உண்டு. காதலன் காதலியோடு அளவளாவி இன்பம் துய்த்தபின் அவளுடைய பெருமையை எடுத்துச் சொல்வான். அப்படிச் சொல்வதை கலம் பாராட்டல் என்ற துறையாகக் கூறுவார்கள். "கொங்குதேர் வாழ்க்கை என்று தொடங்கும் இந்தப் பாட்டு நலம் பாராட்டல் என்னும் துறையில் அமைந்தது. காதலியினது நலத்தைப் பாராட்டிக் கூற வந்த தலைமகன் வண்டைப் பார்த்துச் சொல்வது போலப் பேசுகிருன், - & o a வண்டை நோக்கிக் கூறுவதற்குப் பொருத்த மான காரணம் ஒன்று உண்டு. காதலியின் கூந்தல் மணம் உடையது என்பதைச் சொல்ல வருகிருன். ஏ வண்டே, நீயே சொல். இவளுடைய கூந்தலேப் போல நறுமணம் உடைய பூவை நீ எங்காவது கண் டிருக்கிருயா??? என்று கேட்கிருன். மணத்தைத் தேர் வதில் வண்டு சிறந்தது. மலர்களில் உள்ள பூந் தாதை ஆராய்ந்து கிண்டி உண்டு மகிழ்வது வண்டு. தஃலவன் உயர்ந்த சாதி வண்டாகிய தும்பியைப் பார்த்துச் சொல்கிருன்.