பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.24 குறிஞ்சித் தேன் வண்டு மணத்தைத் தேர்வதிற் சிறந்தது என் பதைச் சீவக சிந்தாமணி ஒரு நிகழ்ச்சியால் நன்ருகப் புலப்படுத்துகிறது. குணமாலே, சுர மஞ்சரி என்ற இரண்டு பெண்கள் வாசனேச் சுண்ணப் பொடியைக் கூட்டி அமைத்தார்கள். அந்த இரண்டு சுண்ணங் களுள் எது உயர்ந்தது என்ற வாதம் எழுந்தது. சீவக னிடம் காட்டினல் அவன் உயர்ந்ததைத் தேர்ந்து கூறுவான் என்பதை உணர்ந்த தோழிமார் அவனிடம் இரண்டையும் காட்டினர்கள். குணமாலேயின் சுண் னமே சிறந்ததென்று அவன் கூறினன். அது சிறந்த தென்பதைக் காரணத்துடன் அவன் எடுத்துக் கூறியதோடு, யாவரும் நேரில் அறியும்படி ஒரு காரி யம் செய்தான். அந்தச் சுண்ணங்களே ஆகாசத்தில் தூவினன். சுரமஞ்சரியின் சுண்ணத்தை வண்டுகள் தொடவில்லே. குணமாலேயின் சுண்ணத்தை வண்டுக் கூட்டங்கள் மொய்த்து விரைவில் உண்டன. வண்ண வார் சிலை ள்ைளல்கொண் டாயிடை விண்ணில் து:விவிட்டான் :வந்து வீழ்ந்தன எண்ணம் மங்கை சுரமைய மாலய ண்ைண வண்டொடு தேன் கவர்ந் துண்டவே (சீவக. 894) இங்கே, காதலன் ஒரு பொருளின் நறுமணத் தைப் பற்றிப் பாராட்ட வருகிறன். அவனுடைய அன்பு காரணமாக அப்படித் தோன்றலாம் என்ற எண்ணத்திற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. ஆத லின் நறுமண ஆராய்ச்சியிலே துறைபோகிய நிபுண கிைய வண்டைச் சாட்சியாக்கிச் சொல்கிருன்.