பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் 25 வண்டுகளுக்குள் தும்பி என்பது மணம் தேர்வதில் சிறந்தது கோத்தும்பி என்றும் அதைச் சொல்வ துண்டு. தலைவன் தும்பியை நோக்கிக் கூறும் பொழுது அதற்குள்ள தகுதியை நினைவுறுத்துகிருன். வாழ்க்கை முழுவதும் பூந்தாதைத் தேர்வதையே தொழிலாக உடையது. கொங்கைத் தேரும் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பது. ஓரிடத்தில் இருக்கும் கொங்கை மாத்திரம் தேர்ந்து மன நிறைவு கொள்வது அன்று. பல மலேச்சாரல்களுக்கும் அங்கேயுள்ள பூம் பொழில் களுக்கும் சென்று சென்று பூக்களை மொய்த் துக் கொங்கினே உண்னும் இயல்புடையது அது. அப்படிப் பல இடங்களுக்கும் சென்று கொங்கைத் தேர்வதற்குத் துணையாக அதற்குச் சிறகு அமைந் திருக்கிறது. பறவைகளுக்கு அமைந்த சிறகுகள் வெளிப்படையாகத் தோன்றும். வண்டுக்கோ பறக்கும் பொழுதுதான் தெரியும். மற்றச் சமயங்களில் அதன் மேல் உள்ள ஒடு போன்ற ஒன்று உடம்போடு உடம் பாக ஒட்டி இருக்கும். பூக்களில் மொய்க்கும் பொழுது பார்த்தால் அதற்குச் சிறகு இருப்பதே தெளிவாகத் தெரியாது. புற ஒட்டுக்கு உள்ளே, அகத்தே, சிறகு அடங்கியிருக்கும்; அகத்தே சிறகையுடைய தும்பியாதலால் அதை அஞ்சிறைத் தும்பி என்று கூறுவது உண்டு. (அகம் சிறை-அஞ்சிறை. அகம் என்ற சொல்லும் சிறை யென்ற சொல்லும் சேர்ந்தால் அஞ்சிறை யென்று ஆகும். இலக்கண நூலில் இதற்குத் தனியே விதி உண்டு.) அஞ்சிறைத் தும்பி பறக்கும் பொழுது பார்த்தால் அழகாக இருக்கும். ஆகையால் அழகிய சிறையையுடைய தும்பி என்று .