பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 குறிஞ்சித் தேன் சொல்லும்படியும் அந்தத் தொடர் அமைந்திருக்கிறது. இரண்டும் அதற்குப் பொருத்தந்தான். அகத்தே சிறையையுடையது, அழகிய சிறையையுடையது, காதலன் பார்த்துப் பேசும் தும்பி. 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!' என்று அழைத்தான் தலேவன். இங்கே உள்ள நறு மணத்தைத் தேர்ந்து சொல்ல அதற்கு வாய்ப்பு என்ன? முதல் முதலில் அவன் காதலியைக் கண்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பின் அவளே அணுகினன். அவள் உடம்பைத் தொட விரும்பினன். அதற்கு ஒரு தந்திரம் செய் தான். அவளுடைய கூந்தலில் வண்டு வந்து மொய்த் தது. அதை ஒட்டுபவனேப்போல அவளே நெருங்கி அவளேத் தொட்டான். இப்படித் தொடும் நிகழ்ச்சியை மெய்தொட்டுப் பயிறல் என்ற துறையாகச் சொல்வர் புலவர். வண்டோச்சி மருங்கு அணைதல்’ என்றும் சொல்வது உண்டு. அப்படி வண்டை ஒச்சி அணேந்து இன்புற்றவன் ஆதலின், வண்டு அவள் கூந்தலின் நறுமணத்தை உணர்ந்திருக்க வேண்டுமென்று அவன் கருதின்ை. இப்போது காதலனுக்கு மற்ருேர் எண்ணம் வந் தது. அபிமானத்தால் காதலியின் கூந்தல் மணமுள்ள தாக அவன் நினேக்கலாம். ஆதலால் வேறு ஒரு சாட்சியை அவன் அணுகினன். ஆல்ை அந்தச் சாட்சி நடுநிலையில் நின்று சொல்வதாக இருக்க வேண்டுமே! தலைவியின் ஊரும்தலேவனுடைய ஊரும்.அடுத்தடுத்தே இருப்பவை. அந்த வண்டு தலைவனுடைய இடத்தி லிருந்து இந்த இடத்துக்குத் தேன் நுகர வந்திருக்க