பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் 27 லாம். அவனே அப்படி வந்தவன்தானே? ஒரு கால் அந்தத் தும்பி தலேவனுடைய மலேச்சாரல் வண்டாக இருந்துவிட்டால், அது அவனுடைய விருப்பத்தை அறிந்து அவன் உள்ளம் உவக்கும்படி சொல்லக்கூடும் அல்லவா? அப்படி அவன் விருப்பத்தை நினைத்து உண்மையை மறைத்துச் சொல்லக்கூடாது. உண்மை எதுவோ, தும்பி தன் அநுபவத்திற் கண்டது எதுவோ, அதைச் சொல்லவேண்டும்.-இவற்றை எல்லாம் எண்ணி அவன் பேசுகிருன். 'கொங்கைத்தேரும் வாழ்க்கையையுடைய தும்பி யே, அழகிய உட் சிறகையுடைய தும்பியே, நான் உன்னே ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீ அதற்கு விடை சொல்ல வேண்டும். என் நிலத்து வண்டாத லின் என் விருப்பத்தையே சொல்ல வேண்டும் என்று நினேத்துச் சொல்லாதே. நீ கண்டதைச் சொல்: என்கிருன்: ‘'என் விருப்பம், என் காமம், எதுவோ அதைச் செப்பாது கண்டதை மொழி?’ என்று வேண்டுகிருன். - கொங் குதேர் வாழ்க்கிை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ இப்படிச் சொன்னதற்கு மற்ருெரு காரணமும் உண்டு. காதலிக்குத் தன் இடம் அருகில் இருப்பது என்பதைக் குறிப்பாகத் தெரியப்படுத்த இது பயன் படும். காமம் செப்பத்தக்க நிலை அந்தத் தும்பிக்கு இருப்பதல்ைதான், அவன் அப்படிச் சொல்கிருன் என்பதை நுண்ணறிவுடைய காதலி உணர்ந்து கொள்வாள். தம்முடைய நிலத்து வண்டாதலின் இவ்வாறு சொல்கிருர். இவர் நிலம் அருகில் உள்ளது