பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 குறிஞ்சித் தேன் போலும் என்ற நினைவு அவளுக்கு உண்டாகும். காதலன் சொல்வதை வண்டு கேட்டு மறுமொழி சொல்லப் போகிறதா, என்ன? இதனுல் காதலியின் உள்ளத்தே மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்பதும், தன் மகிழ்ச்சியையும் வியப்பையும் எப்படியேனும் வெளிப்படுத்த வேண்டும் என்பதுமே தலேவனுடைய நோக்கம். { 豊 。 "இந்தப் பெண்மணியின் கூந்தலேப் போன்ற நறுமணம் உடைய பூவை நீ கண்டிருக்கிருயா?? என்று கேட்க வருகிருன் தலேவன். கூந்தலின் நறு மணத்தை மாத்திரமா அவன் கண்டு இன்புற்று வியந் தான்? அவளுடைய இயல்புகள் எல்லாமே அவனுக்கு இன்பத்தைத் தந்தன. அவற்றை அவன் வெளிப் படுத்துகிருன். அவளிடம் இன்ன இயல்புகள் உன் டென்று தனித்தனியாக எடுத்துச் சொல்லவில்லை. அவளேப் பற்றிச் சொல்லும்போது அடைமொழிகளேச் சேர்த்து அந்த இயல்புகளைப் புலப்படுத்துகிறன். - பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறிஎயிற்று அரிவை என்று பாராட்டுகிருன். - அவனுக்கும் அவளுக்கும் அமைந்த தொடர்பு இன்று புதிதாகத் தோன்றியது அன்று; இந்தப் பிறவி யிலே தோன்றியதும் அன்று. பிறவிதோறும் இருவரும் காதலர்களாக ஒன்றிப் பயின்ருர்கள். அவர்க ளிடையே இருக்கும் நட்புப் பல பிறவிகளிற் பயின்ற