பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் 29. நெருக்கத்தை உடையது. இதைக் காதலன் சொல் கிருன். அந்தப் பழைய தொடர்பு இருப்பதனுல்தான் இப்போது இருவரும் கண்டு காதல் கொள்ள முடிந்தது. இந்தத் தொடர்பு யாராலும் புதிதாக அமைந்த தன்று; ஆதலின் என்றும் அருதது. இப்படிச் சொல்வதும் தலைவியின் உள்ளத்தே உறுதியை உண்டாக்கத்தான். ஏதோ இன்று கண்டு அறியாமையால் இவருடன் காதல் செய்துவிட் டோமே! இவர் யாரோ?- என்று அஞ்சாதே. நான் அருகில் உள்ள மலையில் வாழ்பவன்; ஊழின் வலியால் உன்னேச் சந்திக்கப் பெற்றவன். இந்த நட்புப் பழமையானது; உடம்பு யோனல் போகும் நட்பு அன்று. உயிரோடு ஒட்டியது. ஆதலின் எல்லாப் பிறப்புக்களிலும் தொடர்ந்து வருவது?’ என்று விரி வாகச் சொல்லவில்லே அவன். ஆயினும் அத்தனை கருத்தையும் உள்ளடக்கிப் பயிலியது கெழுமிய நட்பு இது என்று சுருக்கமாகச் சொல்கிருன். - பழைய தொடர்பினல் காதலியைச் சந்தித்ததை எண்ணியவன், அவளே முதல் முதலிற் கண்டபோது அவள் உருவத்தின் முழுச் சாயலும் மயில் போல இருந்ததை உணர்ந்தான்; அதை இப்போது நினைக் கிருன். பயிலியது கெழீஇய நட்புக்குப் பின், அந்த மயில் இயல் நினேவுக்கு வருகிறது. மயிலியலைக் கண்டு அவள் கண்களோடு அவன் கண்கள் மோன மொழி பேசிக் குலாவின. அப்பால் அவளுக்கு அவ னிடம் காதல் தோன்றியதை அவன் உணர்ந்து கொண்டான். அப்படி உணரத் துணையாக இருந்தது. அவளுடைய புன்முறுவல். அந்த முறுவலே அவ: