பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:30 குறிஞ்சித் தேன் ளுடைய உள்ளத்துக்குள்ளே அரும்பிய காதற் குறிப்பை உணர்த்தி அவனுடைய உயிரைத் தளிர்க் கச் செய்தது. அந்த அழகிய முறுவலே நினேக்கிருன். அதன் பின்னர் அவளோடு இன்புற்றபோது அந்த முறுவலேச் செய்த எயிற்றின் இயல்பை நன்கு உணர்ந்தான். அவளோடு ஒன்றுபட்ட அவன் தான் பெற்ற நுகர்ச்சியை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாகச் சொல்கிறன். அவள் எயிறு செறிவுள் :ளவை என்று பாராட்டுகிருன். முறுவற் குறிப் புணர்ந்த போதும், இன்புற்ற போதும் அறிந்த அதுவே முதலும் முடிவுமாகிய நிலேயைக் குறிக்கின் றது. அவன் அவளேப்பற்றிச் சொல்லும்போது இவை முறையாக வருகின்றன. அவனேச் சந்திக்கக் காரணமான பழைய நட்புரிமையும், அவளேச் சந்தித்த போது அவன் கண்ட சாயலும், அவள் காதலையறிந்து இன்புற்றபோது உணர்ந்த செறி எயிறும் ஒன்றன் பின் ஒன்ருக அவனுடைய பாராட்டில் இணைகின்றன. பிறவிதோறும் வந்த தொடர்புடையாள் என்பதல்ை உரிமையையும், மயில் போலும் சாயலுடையாள் என் பதஞல் அவளுடைய அழகையும்,செறி எயிறுடையாள் என்பதல்ை தான் பெற்ற இன்பத்தையும் புலப் படுத்துகிருன். இத்தகைய அரிவையினது கூந்தலின் நறுமணத்தை நீ கண்டாயே, கண்டதைச் சொல். நீ பல மலர்களைக் கண்டிருப்பாய். அவற்றின் தாதைத் தேர்ந்து மணத்தை அறிந்திருப்பாய். அத்தனே மலர் களிலும் இந்த அரிவையின் கூந்தலேப் போன்ற மணத்தை உடைய மலர்கள் எவையேனும் நீ அறிந்த துண்டா? சொல்?’ என்று காதலன் கேட்கிருன். இது