பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் 31 போன்ற மணமுடையது வேறு இல்லே’ என்று அவன் சொல்லவில்லை. ஆனல் கருத்து அதுதான். ஆயி னும் அப்படிச் சொல்வதில் சுவை இராது. ஆகையால் கேள்வி கேட்பது போல வைத்தான். இந்தப் பெண்ணின் கூந்தலுக்கு மலரால் மணம் வந்தது, இவள் மலர் குடும் இயல்புடையாள் என்று யாரேனும் நக்கீரரைப் போலக் கூற முன் வந் தால்? மலரால் வந்த மணம் என்ருல், இன்ன மலரின் வாசனை வீசுகிறது என்று சொல்லிவிடலாம். நம்மால் சொல்ல இயலாவிட்டாலும் கொங்கு தேர் வாழ்க் கையை உடைய தும்பி பல பூவை அறியும் பழக்க முடையதாதலின் அது தேர்ந்து சொல்லும், ஆகவே அதைக் கேட்கிறேன்’ என்று தலைவன் கேட்பது போலவும் அமைந்திருக்கிறது பாட்டு. உலகில் உள்ள மலர்களின் மணத்தை உடையது அன்று, இந்தக் கூந்தல். இந்தக் கூந்தலின் மணத்தை எந்த மலரிலும் காணவொண்ணுது. இது தனக்கெனத் தனியே இயற்கையாக ஒரு நறுமணத்தைஉடையது?? என்ற கருத்தைப் பாட்டுச் சொல்கிறது. - உத்தம மகளிர் கூந்தலில் இயற்கையான மணம் உண்டு என்ற கருத்தை இந்தப் பாட்டு ஒரு நாடகத் தில் வரும் காட்சி போல அமைத்துக் காட்டுகிறது அல்லவா? - கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ; பயிலியது கெழீஇய கட்பின் மயில் இயற் செறிஎயிற்று அரிவை கூந்தலின் கறியவும் உளவோ அறியும் பூவே? கு-4 r