பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சித் தேன் காதலன் காதலியை நாள்தோறும் தினேப்புனத் திலோ வேறு இடங்களிலோ கண்டு அளவளாவிச் சென்றன். தினேப்புனத்தைக் காக்கும் வேலே இல் லாமல் காதலி வீட்டிலே தங்கினுல் இராக்காலங்களில் விட்டுக்குப் புறம்பே யாரும் அறியாதபடி அவளேச் சந்தித்து வந்தான். பகலிலே சந்திக்கும் நிகழ்ச்சி யைப் பகற் குறியென்றும், இரவிலே சந்திப்பதை இரவுக் குறியென்றும் சொல்வார்கள். பகலிலே இன்ன இடத்திலே சந்திப்பது என்று குறிப்பிட்டுக் கொண்டு வந்து சேர்தலால் பகற்குறி என்ற பெயர் வந்தது, அப்படியே இரவிலே குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதால் இரவுக் குறி என்ற பெயர் வந்தது. அவ்வாறு சந்திப்பதற்கு உரியதாகக் குறிப்பிடும் இடத்தைக் குறியிடம் என்று சொல் வார்கள். பகற்குறி, இரவுக் குறி என்ற இரண்டும் களவுக் காதல் நிகழும்போது அமைவன. அக் காலங்களில் காதலிக்கு உறுதுணையாக அவளுடைய ஆருயிர்த் தோழி உடன் இருப்பாள். காதலியினுடைய குறிப் பறிந்து அவள் விருப்பத்தைத் தலேவனுக்குத் தெரிவிப் பதும், அவ்விருவரையும் குறிப்பிட்ட இடத்தில் சந் திப்பதற்கு வேண்டியவற்றைச் செய்வதும் போன்ற உதவிகளே அவள் செய்வாள்.