பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சித் தேன் 35 ஒருவரும் அறியாமல் களவொழுக்கத்திலே எவ் வளவு நாளேக்கு ஈடுபட முடியும்? சில சமயங்களில் தலைவன் தலைவியைச் சந்திக்கமுடியாமல் போய்விடும். அப்பொழுதெல்லாம் அவள் மிக்க துன்பத்தை அடை வாள். இப்படி எவ்வளவு நாளேக்குப் பிறர் அறியாமல் நட்புச் செய்வது? உலகம் அறிய மணந்து கொண்டு வாழ்ந்தால் எப்போதும் பிரியாமல் இருக்கலாமே!’ என்ற எண்ணம் அவளுக்கு உண்டாகும். அந்தக் குறிப்பைத் தோழி உணர்ந்து கொள்வாள். அவ்விரு வரும் சந்திப்பதில் பல இடையூறுகள் நேர்வதையும், தலைவனுடைய பிரிவினல் தலைவி செயலழிந்து நிற் பதையும் தோழி தலைவனிடம் கூறுவாள். அவற்றை அவன் கேட்டு, இத்தகைய இடர்ப்பாடுகள் இல்லா மல் இருக்க வேண்டுமானல் காதலியை மணந்து கொள்வதுதான் தக்கது’ என்று நினைப்பான்; அதற்கு ஏற்ற முயற்சிகளேச் செய்யப் புகுவான். இவ்வாறு, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண் ணத்தைத் தலைவனுடைய கருத்திலே தோன்றும் படி தோழி கூறுவனவற்றை வரைவுகடாதல் என்று சொல்வார்கள். வரைவு என்பது மணத்தைக் குறிப் பது. கடாதல்-செலுத்துதல். களவுக் காதலில் ஈடு பட்டிருக்கும் தலைவனுடைய மனத்தில் திருமணத் தைப் பற்றிய எண்ணத்தைப் புகுத்துவதால் வரைவு கடாதல் என்ற பெயர் வந்தது. களவு என்னும் ஒழுக்க வகையில் வரைவு கடாதல் என்பது ஒரு பகுதி. ஒழுக்க வகையைக் கைகோள் என்று இலக்கணம் கூறும். வரைவு கடாதலேப் போன்ற பகுதியைக் கிளவித் தொகை என்று பிற்கால இலக்கணங்கள் கூறும். களவு என்னும் கைகோளில் வரைவு கடா