பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

א-הא"אאיאי.א.או" יאוני: י"אאיאי: "איי יי יו** א? 36 குறிஞ்சித் தேன் தல் என்னும் கிளவித்தொகையில் பல துறைகள் உண்டு. ஒவ்வொரு துறையும் யாரேனும் ஒருவரு டைய கூற்றக இருக்கும். இப்போது வரப்போகும் கூற்றுத் தலேவியினுடையது. ο ο வழக்கம்போல் தலேவியைச் சந்திப்பதற்காகத் தலேவன் வந்து மறைவில் நிற்கிறன். தலேவி அவனேச் சந்திக்கும்பொருட்டுத் தோழியுடன் வருகிருள். தலே வன் வந்து மறைவில் நிற்பதை அவ்விருவரும் தெரிந்து கொள்கிருர்கள். அவனே எப்.டியாவது திருமணத்துக்கு வேண்டிய முயற்சிகாேச் செய்யத் துாண்ட வேண்டுமென்று தோழி எண்.:சியிருந்தாள். அதை அவனிடம் நேரில் தெரிவிப்பது கரியாதையாக இராதே என்று நினேத்தாள். மறைமுகமாகவாவது சொல்லத்தான் வேண்டும் என்று நீர்மானித்தாள். அதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந் தாள். இப்போது அவன் மறைவில் இருப்பது தெரிந்து அவன் காதிலே படும்படி தலேவியை நோக்கிப் பேசு வது போலப் பேசத் தொடங்கிகுறள். 'உன்னுடைய காதலர் செய்யும் காரியம் ஒன்றும் நன்ருக இல்லே. உன்னே யாரும் அறியாமல் சந்தித்து அளவளாவும் இந்தச் செயல் எவ்வளவு நாளேக்கு நடக்குமென்று அவர் நினேத்திருக்கிருரோ தெரிய வில்லே. ஒவ்வொரு நாளும் நீ படும் துன்பத்தை நான் அல்லவா அறிவேன்? அவரை நீ சந்திக்கும் போதெல் லாம் உனக்கு உலகமே மறந்து போகிறது; இன்பக் கடலில் துளைந்து மகிழ்கிருய். அப்போது அவர்