பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சித் தேன் 37 உன்னேப் பார்ப்பதால் உன்னுடைய துன்பத்தை அவ ரால் அறிய முடிவதில்லே. அவர் உன்னேச் சந்தித்து விட்டுப் போன பிறகு நீ அவர் பிரிவால் படும் இன்னலே நான் ஒவ்வொரு கணமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் வருவதற்குச் சிறிது தாமதம் ஆகுமானல் நெருப்பிலே விழுந்த புழுவைப் போல நீ துடிதுடித்து வாடுகிறயே அந்த நிலையை அவர் எண்ணிப் பார்க்கிருரா??? தோழி சொல்வது அத்தனையும் உண்மை என் பதைக் காதலி அறிவாள். ஆகவே அவள் விடை கூருமல் மெளனமாக நிற்கிருள். 'அவர் ஆடவர். எதற்கும் அஞ்சாதவர். நாமோ பெண்டிர். எது வந்தாலும் அவருக்குக் கவலே இல்லேநமக்கோ ஒவ்வொரு கணமும் அச்சமாக இருக்கிறது. பெண்டிருடைய மன நிலையை உணர்ந்துகொள்ளாத ஆடவரை என்னவென்று சொல்வது??? இதுவரை காதலி படும் துன்பத்தைப் பற்றிப் பேசிய தோழி, இப்போது காதலனேக் குறைகூறத் தொடங்குகிருள். அவனுடைய இயல்பை இழிவாகக் கூற முற்படுகிருள். இப்படிப் பேசுவதற்கு இயற் பழித்தல் என்று இலக்கணத்தில் பெயர் வைத்திருக் கிருர்கள். தோழி தலைவனுடைய இயல்பைப் பழிக் கிருள். 'அவர் உண்மையாக உன்னிடத்தில் அன்புடை யவராக இருந்தால் உன் மன நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? மலரைப் போல மெல்லிய உள்ளம் படைத்தவர் மகளிர் என்ற உண்மையை அவர் தெரிந்துகொள்ளவில்லையோ? தெரிந்தும்