பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சித் தேன் - 39.” படி சொல்ல வார்த்தை இல்லே. நான் அதை உனக்கு. எப்படிச் சொல்வேன்! உலகத்தில் எந்தப் பொருளேப் பற்றியாவது சிறப்பித்துச் சொல்லவேண்டுமால்ை, அதன் அளவைக் குறித்துப் பேசுகிருர்கள்; உவமை. கூறிப் பாராட்டுகிறர்கள். காதல் அளவுக்கு அப்பாற். பட்டது; உவமைக்கு அடங்காதது; உரைக்கே அடங்குவதல்லவே! கடவுளேப் பற்றிச் சொல்ல வருடம் வர்கள், அவர் எல்லேயில்லாதவர், உவமானம் இல்லா தவர், உணர்தற்கு அரியவர், உணர்ந்தவராலே பிற ருக்கு உணர்த்துவதற்கு அரியவர் என்று பலபடியாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இந்தக் காதல் கடவுளேப் போன்றது; கடவுளால் அமைந்தது: கடவுள் தன்மை உடையது. இதைக்காட்டிலும் பெரியது ஒன்று இல்லே. இதைக்காட்டிலும் உயர்ந்தது இல்லே. இதைக்காட்டிலும் உறுதி. யானதும் இல்லே. இதைக்காட்டிலும் இனிமை யானது முக்காலும் இல்லே. பரந்து விரிந்தது, உயர்ந்து சிறந்தது, ஆழ்ந்து உறுதி பெற்றது, உயி: ரிலே இனிப்பது என்று சொல்லுகிறேன். என் வார்த்தைகள் உனக்கு விளங்குமென்று தோன்ற வில்லே. நான் என் செய்வேன் தோழி!?? தோழி அவளேக் கூர்ந்து கவனிக்கிருள். மறை, வில் நின்ற தலைவனும் கவனிக்கிறன். இதற்கு முன் தோழி பேசிய வார்த்தைகள் அவன் காதில் விழுந். தன. அப்பொழுது அவன் மனம் வேதனைப்பட்டது. தான் செய்யவேண்டிய கடமையைச் சரியாகச் செய்ய வில்லை என்று அறிந்து வருந்தின்ை. தோழியின்மேல் அவனுக்குக் கோபம் வரவில்லை. காதலியை மணந்துக