பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

----- குறிஞ்சித் தேன் 41 மண்டலம், பின்னும் உயர்ந்தது நட்சத்திர மண்டலம். இவ்வளவு மண்டலங்களேயும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவற்றிற்கும் மேலே உயர்ந்து நிற்பது ஒன்று உண்டு. அதைத்தானே நாம் வானம் என்று கூறுகிருேம்? எட்ட எட்ட எட்டாமல் உயர்ந்து நிற் கிறது அல்லவா அது? அந்த வானத்தைக் காட்டிலும் உயர்ந்தது ஒன்றை நான் அறிவேன். அதுதான் என் காதலரோடு நான்கொண்ட நட்பு; எங்கள் தெய் விகக் காதல். வானத்தையும்விட உயர்ந்தது அது. வானம் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு ஓங்கி நிற்கிறது என்று சொல்வார்கள். எங்கள் காதலும் அப்படியே, எங்கள் நன்மைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி மேல் ஓங்கி நிற்கிறது, நன்மைகள் மாத்திரமா? நீ இவ்வளவு நேரம் சொன்னயே, அந் தத் துன்பங்களேக்கூட அடக்கிக்கொண்டு, அவற் றிற்கு மேலே உயர்ந்து நிற்கிறது. அந்த இணேயற்ற காதல். நிலத்தினும் பெரிய காதல், வானினும் உயர்ந்த காதல் என்று சொல்வதல்ை நான் அதன் இயல்பு முழுவதையும் சொல்லிவிடவில்லே. அது சொல்ல முடியாத தொன்று. - 'இது உறுதியானதா என்று நீ ஐயுற்ருய். எங் கள் நட்பு ஆழ்ந்தது என்று சொன்னல் உன்னல் அறிந்துகொள்ள முடியாது. ஆழமானது என்று சொல்பவற்றுள் மிகச் சிறந்தது. கடல். அதனால்தான் அதற்கு ஆழி என்று பெயர் வைத்திருக்கிருர்கள். அதைவிட ஆழமான பொருள் உலகத்தில் இல்லை. அத்தனே ஆழம் இருப்பதனால்தான் அது வற்ற வில்லை. உலகில் மழை பெய்யாமல் ஆறுகள்