பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s~*~* 42 "குறிஞ்சித் திேன் வற்றினாலும் கடல் நீரின் அளவு குறைவதில்லை. அது ஆழமாக இருப்பதல்ைதான் உலகுக்கே நீர் கிடைக் கிறது; மழை பெய்கிறது. எங்கள் காதல் கடலே விட ஆழமானது; உறுதியானது. மழை பெய்த நீர் குழி யில் தேங்கி மறுநாள் உலர்ந்துவிடுவது போன்ற தன்று. பிறவிதோறும் அமைந்த தொடர்பு இது. இதன் ஆழத்தை, எத்தனே காலமாக இந்த நட்பு ற் பட்டது என்ற அளவை, அறிய எங்களாலே முடியாது. தெய்வத்துக்குத்தான் தெரியும். கடல் நீரினும் ஆழம் மிக்கது இக் காதல் என்று சொல்வதற்கு மேலே எனக் குச் சொல்லத் தெரியவில்லேயே பெரியதும் உயர்ந்த தும் ஆழ்ந்ததுமாகிய இந்த நட்பின் சிறப்பை நீ தேர்ந்து உணரவில்லே. ? இப்படிக் காதலின் பெருமையைச் சொல்லிக், கொண்டே வந்தவள், அதன் இனிமையைச் சொல்ல வந்தாள். அதற்கு உவமை அகப்படவில்லே. காத லால் பெறும் இன்பத்தை வெளிப்படையாகச் சொல்ல வும் நாணினுள். ஆனல் காதலின் உயர்வு ஆழம் முதலியவற்றைக் காட்டிலும் அதன் இனிமைதானே தலைமையானது? காதலின் உயர்வு அதைப் போற்றச் செய்கிறது. அதன் இனிமைதானே அவர்களேப் பிரியா மல் இருக்கும்படி நாடச் செய்கிறது? ஆதலின் அந்த இனிமையைச் சொல்ல எண்ணிஞள். வெளிப்படை யாகச் சொல்ல மனம் வரவில்லே. குறிப்பாகச் சொல்ல நினைக்கிருள். - தன் காதலனுடைய நாட்டில் உள்ள இனிய பொருள் ஒன்று அவள் நினைவுக்கு வருகிறது. அதை அவள் நேரே பார்த்திராவிட்டாலும் தன் காதலனும்