பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சித் தேன் 43 மற்றவர்களும் சொல்லிக் கேட்டிருக்கிருள். அந்த இனிய பொருள் என்ன தெரியுமா? தேன்; பெருந் தேன்; குறிஞ்சித்தேன். நிலப்பரப்பைக் குறிஞ்சி, பாலே, முல்லே, மருதம், நெய்தல் என்று ஐந்து வகைகளாகத் தமிழ் மக்கள் பகுத்தார்கள். இந்த ஐந்திலும் முதல் நிலம் குறிஞ்சி; உயர்ந்த நிலம். மலேயும் மலேசார்ந்த இடமும் குறிஞ்சி யாகும் குறிஞ்சி நிலத்துக்கு மலே சம்பந்தமான பெயரை வைக்கவில்லை. மலரால் பெயர் வைத்தனர். ஐந்து நிலங்களுக்குமே மலரால் பெயர்கள் அமைந் திருக்கின்றன. குறிஞ்சிக்கும் குறிஞ்சிப்பூவால் பெயர் ஏற்பட்டது. - - குறிஞ்சிப் பூ நீல நிறம் உடையது. அது ஒவ் வோர் ஆண்டும் பூப்பது இல்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அது பூக்கும். மல ரும் பருவத்தில் மலேப்பகுதிகள் முழுவதும் ஒரே குறிஞ்சி மலர்க் காடாக இருக்கும். நீலகிரியில் இந்தக் குறிஞ்சி மலர்வது உண்டு. நீல மலராகிய குறிஞ்சி எங்கும் மலர்ந்து காணப்பெற்றதல்ைதான் அதற்கு நீலகிரி என்ற பெயர் வந்தது. நீலகிரியில் வாழும் பழங்குடி மக்களாகிய தொதுவர்கள் குறிஞ்சி மலர் பூக்கும் பருவத்தை நன்கு நினேவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் என் பது இயற்கையிலேயே அமைந்த ஒரு கால வரையறை. வியாழன் ஒரு முறை பன்னிரண்டு ராசி களேயும் சுற்றிவரப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மகாமகம் என்ற திருவிழாப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. அந்த விழாவில்