பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சித்தேன் 45. கரிய கொம்புகளையுடைய குறிஞ்சியிலே மலர்கள் மலர்ந்து வண்டினங்களே வா வா என்று அழைக்கும். தேன் எங்கே எங்கே என்று தேடும் வண்டுகள் குறிஞ்சி மலர் இதழ் திறந்து அழைக்கும் அழைப்புக் காகவா காத்திருக்கும்? அது மலரும் பருவத்தை எதிர் நோக்கி வந்து காத்துக் கிடக்கும். வேறு எங்கும் காணுத தேன் அது; எந்த மலரிலும் கிடைக் காத பெரிய தேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். அந்தத் தேனே ஆவலுடன் மொண்டு கொண்டு சென்று மலே முழைஞ்சுகளிலும் பாறைகளிலும் பெரிய பெரிய தேனடைகளே வைக்கும். ஆ என்ன இனிமையான தேன் அது கருங்கோலையுடைய குறிஞ்சிப் பூவைக் கொண்டு இழைத்த பெருந் தேன் அல்லவா அது??? - இப்போது தலைவி வாயினுல் குறிஞ்சித் தேனேப் பற்றி வருணித்தாலும் அவள் மனத்தில் தேனின் நினைவு இல்லை. தலைவனுடைய காதலால் பெற்ற இன்பத்தை அவள் எண்ணுகிருள். உள்ளத்தினூடே உணர்ந்த அந்த இன்பத்தைச் சொல்ல முடியவில்லை; சொல்லவும் நாணுகிருள். சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் எழுகிறது. ஆகவே குறிஞ்சித் தேனே, தன் னுடைய காதலனுடைய நாட்டிலே உண்டாகும் குறிஞ்சிப் பெருந்தேனே, சிறப்பித்துச் சொல்லும் போதே, அவள் தான் பெற்ற இன்பத்தைப் பற்றியே அப்படிச் சொல்வதாக நினைத்துக் கொள்ளு. கிருள். - - - . . -அப்படி வண்டுகள் குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனைத் தேர்ந்து தொகுத்துப் பெருந் தேன்