பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சித் தேன் 47 கிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரள வின்றே; சாரற் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருங்தேன் இழைக்கும் நாடளுெடு கட்பே ! டி மலைச் சாரல்களில் உள்ள கரிய கொம்புகளையுடைய குறிஞ்சியின் மலர்களைக் கொண்டு (வண்டுகள்) பெரிய தேஜனக் கூட்டுகின்ற மலை நாடைேடு (நான் செய்த) நட்பு, நிலத்தைக் காட்டிலும் அகலமானது; வானைக் காட்டிலும் உயர்ந்தது; கடல் நீரைக் காட்டிலும் (அளத்தற்கு) அரிய ஆழமாகிய அளவையுடையது. நீரைச் சொன்னமையால் அளவு என்றது ஆழத்தைக் குறித்தது. உயர்ந்தன்று - உயர்ந்தது. அரு அளவு ஆரளவு அளத்தற்கு அரிய ஆழம் என்பது பொருள். அள வின்று அளவினையுடையது. நாடன் என்பது குறிஞ்சி நிலத் தலைவனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. * தொல்காப்பியத்துக்கு உரை வகுத்த பேராசிரியர் இந்தப் பாட்டைத் தம் உரையில் ஒரிடத்தில் உதா ரணமாகக் காட்டுகிருர் (மெய்ப்பாட்டியல், 7.) அங்கே இந்தப் பாட்டுக்கு உரை செய்வதுபோலச் சிலவற்றை எழுதியிருக்கிறர். கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந் தேன் இழைத்தாற் போல, வழிமுறையாற். பெருகற்பாலதாகிய நட்பு, மற்று அவனேக் கண்ணுற்ற ஞான்றே நிலத்தினது அகலம் போலவும், விசும்பின் ஒக்கம் (உயர்வு) போலவும், கடலின் ஆழம் போலவும் ஒருகாலே பெருகிற்று’ என்று எழுதியுள்ளார். துறை தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகன் இயற்பட மொழிந்தது. கு-5