பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் அன்பும் பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் வேற் றுாருக்குச் செல்ல நினைத்தான். மணம் புரிந்து கொண்ட பின் ஒரு நாளேனும் பிரிவின்றி த் தன் காதலியுடன் வாழ்ந்து வருகிருன் அவன். இல் வாழ் விலே இணையற்ற இன்பம் கண்டாலும், அந்த இன் பம் நெடுங்காலம் இருக்க வேண்டும் அல்லவா? கையில் போதிய பொருள் இருந்தால் அச்சமின்றி இல்லற வாழ்வை நடத்தலாம்; சோர்வின்றி வாழலாம். ஆகவே பொருள் தேடும்பொருட்டு வேற்றுார் செல்ல எண்ணம் கொண்டான். - பொருள் தேடுவதற்கென்று திட்டமிட்டுச் செல் லும்போது ஒருநாள் இருநாள் மட்டும் இருந்து, ஏதோ கிடைத்தது போதும் என்று வந்துவிடலாமா? அப்ப டிக் கொண்டுவரும் பொருள் எத்தனே காலத்துக்குப் பயன்படும்? போகிறதுதான் போகிருேம். நிரம்பிய பொருளே ஈட்டிக்கொண்டு வரவேண்டும். அதற்கு ஏற்றபடி சிலகாலம் நாம் வேற்றுாரில் இருக்கத்தான் வேண்டும்’ என்று அவன் எண்ணின்ை. ஆனல் அவ்வளவு காலமும் தன்னைத் தன் காதலி பிரிந்து அமைதியாக வாழ்வாளா என்ற ஐயம் உண்டாயிற்று. அவளுடைய உயிர்த் தோழி துணைக்கு இருப்பதால் அவள் தக்க வணணம் ஆறுதல் கூறித் தேற்றுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததது.