பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் அன்பும் 51 ; தோழி அது உண்மைதான். உன் காதலர் நெடு நாளாகவே இல்லற வாழ்வை இப்படி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்க வேண்டும். தலைவி : அதனே நீ எப்படி உணர்ந்தாய்? தோழி : இல்வாழ்வுக்கு வேண்டிய பொருள்களேயெல் லாம் நிரப்பி வைத்திருக்கிருர். உன் மனம் கோணமல் நடக்கிருர். களவுக்காலத்தில் பிறர் அறியாதபடி வந்து உன்னேச் சந்தித்தபோதும் அவர் எவ்வளவோ தந்திரமாக வந்தார். அவருடைய கூரிய அறிவை அன்றே உணர்ந் தேன். இன்று பின்னும் நன்ருக உணர்கிறேன். தலைவி ஆடவர் அறிவு உயர்ந்ததென்பதை இன்றுதான் புதிதாக உணர்ந்தனே யோ? தோழி : இப்போது புதிதாக உணர்ந்து கொண்ட செய்தி ஒன்று உண்டு. அதன்பின்னர் அவ ருடைய பேரறிவை நன்கு உணர்ந்து வியந் தேன்.அவருடைய தீர்க்க தரிசனம் புலயிைற்று. தலவி : தீர்க்க தரிசனமா? அது என்ன? தோழி : பின்னல் வருவனவற்றை முன்கூட்டியே அறிவதும், அப்படி அறிந்ததற்கேற்பச் செயல் செய்வதும் எல்லோரிடமும் காண இயலாதபண்பு கள். மகிழ்ச்சியாக இருக்கும்போது, உள்ள பொருள்களேயெல்லாம் செலவழித்துவிட்டு, பின் கையிலே பொருள் இல்லாமற்போல்ை வாடுவது மடமையுடையோர் செயல். அறிவுடையாரோ பின் வருவனவற்றை முன் அறிந்து அதற்கு ஏற்ற படி வேண்டிய பொருள்களைத் தேடிச் சேமித்து வைத்துக்கொள்வர்.